பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多斑7 * சத்திய ஆவேசம்

பேராசிரியர், கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, தழுதழுத்த குரலில் மன்றாடுபவர் போல் பேசினார்.

"ஒங்களுக்கு- ஒங்களுக்கு. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே? எல்லாப் பயலுவளும் என்னை கண்களால் வெட்டி வாயால மெல்லுற இந்தச் சமயத்துல, இப்படி ஒரு செய்தியா? எல்லோரும் பார்க்கிற பார்வையில, பேசுற பேச்சுல, ஒரு வேள நிசமாவே நாமும் அயோக்கியன்தானோன்னு என்னையே, சிலசமயம் நான் சந்தேகமாய் பார்க்கிற தற்கொலைக் காலத்துல, புத்துயிர் மாதிரி வந்திருக்கு. அடேடே பத்திரிகைக்காரங்க எல்லாருமே மோசமுன்னு நான் நெனைச்சது எவ்வளவு தப்பாய்ப் போச்சு. என்னைப் பற்றி முன்னப் பின்ன தெரியாத இந்தப் பத்திரிகை, எழுதுன எழுத்துக்கு, நான் காலங்காலமும் நன்றியோட."

"நிறுத்துங்க ஸார் பளுவுலேயே பெரிய பளு நன்றிப் பளு. பச்சையாய் சொல்லப்போனால், ஒங்களை ஆதரிக்கணுமுன்னு தனிப்பட்ட முறையில் இந்தச் செய்தியைப் போடலே. பாதிக்கப்பட்ட நல்லவங்களுக்கு குரல் கொடுப்பதும், ஆதரவு காட்டி அனைத்துக் கொள்வதும் எங்கள் பணிகளில் ஒன்று. உங்களுக்கு ஆட்சேபம் இல்லன்னா, ஒங்க வழக்குகளை, எங்கள் வழக்கறிஞர்களே பைசா வாங்கால் எடுத்து நடத்துவாங்க. என்னடா இந்தக் கந்த வேட்டிக்காரன், இப்படிப் பேசுறான்னு நினைக்காதீங்க. நான் எல்லோரையும் கலந்து பேசிட்டுத்தான் இதை உங்ககிட்டே சொல்றேன்."

பேராசிரியர், கண்ணனை அண்ணாந்து பார்த்தார். சாதாரணப் புருப் ரீடராகத் தோன்றியவர், இப்போது பல்வேறு விவரங்களை 'லீட் செய்ததற்குப்புருப்பாய் தோன்றினார். வெளிப்படையாகத் தெரியும் வறுமையிலும், அவர் இவ்வளவு அழுத்தமாய் இருப்பதைக் கண்டதும், தனக்குள்ளேயே வெட்கப்பட்டார். இரவுகளில் தான் கண்விழித்திருப்பதையும், சோதனைகளை சாதனைகளாக்க முடியாமல், தோல்வி மனப்பான்மையில் தவிப்பதையும் நினைத்து நாணப்பட்டார். கண்ணனைப் பார்க்கப் பார்க்க, அவரின் அஞ்சாப் பார்வையும், அன்பான தோரணையும், பேராசிரியருக்கு மலைப்பைக் கொடுத்தன. அருவிகளையும், ஆறுகளையும், காடுகளையும்.உள்ளடக்கியபடியே 'சிவனே என்று கிடக்கும் மலைபோல், உலகின் முக்கால் பாகத்தை ஆட்கொண்டாலும் அலட்டிக்காமல் இருக்கும் கடல்போல், அண்ட கோளங்களை உள்ளடக்கி, அசாதாரணத்திலேயே சாதாரணமாய் தோன்றும ஆகாயம் போல், அவருக்கு கண்ணன் தோற்றம் காட்டினார். அவரையே சிறிதுநேரம் பார்த்த பேராசிரியர், மீண்டும் பத்திாைகைக்குள் மூழ்கினார். பிறகு, அப்பாவுவையும் வாடிக்கைக்காரர்களையும் இன்னும் நல்லா பிடிபிடின்னு பிடிச்சிருக்கனும் என்று செல்லமாக அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/229&oldid=558836" இலிருந்து மீள்விக்கப்பட்டது