பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 * சத்திய ஆவேசம்

தோற்றம் மட்டுமல்ல, நல்லவள் என்று நம்ப வைக்குபடியான தோரணைக்காரி.

அந்தத் தோற்றமும், தோரணையும் மனதில் படியாமல், ஒருவேளை அவற்றை மீறி, முத்தையா, அவள்மீது வீசிய தன் பார்வையைக் கோபமாக்கிக் கொண்டிருந்தான். இதற்குள் ஒரு மாணவன் "இந்த மிஸ், நம்ம பிரபுவை இடியட்ன்னு திட்டுது என்றான். இந்தப் பட்டத்தை பெரும்பாடுப்பட்டுச் சுமப்பவன் போல் தலையை அடிக்கடி தூக்கித் தூக்கிக் காட்டிய பிரபு, எல்லோரும் அவங்க அப்பா மாதிரி இருப்பாங்கன்னு நினைப்பு என்றான்.

முத்தையா, வெடித்தான்.

'எதுக்காக மேடம் இப்டிக் கேட்டீங்க? அப்பா பிரின்ஸ்பால் என்கிற அகம்பாவத்துல, போலீஸ் பாதுகாப்பு இருக்கிற தைரியத்துல எது வேணுமுன்னாலும் பேசலாமுன்னு எண்ணம் வரப்படாது. டெல் மீ. எதுக்காக இப்டிக் கேட்டீங்க.."

அவள், முத்தையாவை ஆச்சரியமாகப் பார்த்தாள். சரியான நாட்டுப்புறம், என்று, தானே சில சமயம் சென்னை மாடல் இலக்கணப்படி நினைத்த இந்த ஆசாமி - ஆட்டுக்குட்டிபோல எதையும் நோக்காமல், தன் போக்கிலேயே நோக்கும் இது - இப்போது பேசுகிற வேகத்தையும், அந்த வேகத்தைச் செம்மைப் படுத்தும் நிதானத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டவளாய், கண்களை அகலமாக்கினாள். தன்னை, எப்போதுமே அழுத்தமாக நோக்காத - தன்னால் அய்யோ - பாவம் - கேஸ் என்று நினைக்கப் பட்டவனை, ஊடுருவிப் பார்த்தாள். பிறகு, அவன் கண்கள் காட்டிய கோபத்தில், ஒரு பங்கை வாங்கிக் கொண்டவள் போல், எதிர்க்கேள்வி போட்டாள்.

"இதே கேள்வியைத்தான் நானும் கேட்க விரும்புறேன். பக்கத்துல கும்பல் இருக்கு என்கிற தைரியத்துல. ஒருத்தரை எப்படி வேணுமுன்னாலும் அவமானப் படுத்தலாமா? சுயமரியாதை என்கிறது பிறர் மரியாதையையும் பேணுறது என்பதை மறக்கலாமா."

முத்தையாவுக்குக் குழப்பமாக இருந்தது. இந்தச் சமயத்துல, இதுவா பிரச்சனை? இவளா பிரச்சனை? மிஞ்சுவது போலவும், கெஞ்சுவது போலவும் பேசினான்.

“ரொம்பப் புண்ணியம் மேடம் ஒங்களுக்கு. தயவு செய்து எங்களை விட்டுடுங்க. நீங்க எந்த வேலைக்கு வந்திங்களோ, அந்த வேலையைப் பார்த்துப் போங்க. பிளிஸ்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/23&oldid=558626" இலிருந்து மீள்விக்கப்பட்டது