பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 218

குறைப்பட்டபோது, மேகலா அப்பா என்றாள் கோபமாக் கண்ணன், அழுத்தம் திருத்தமாய் சொன்னார்.

"நாங்கள் குற்றங்களுக்கு எதிரிகளே தவிர, குற்றவாளிகளுக்கு அல்ல. இந்தச் சமூக அமைப்பை விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதால் இதன்மேல் ஆதிக்கம் செய்வோரை கேரெக்டர்களாகப் பார்க்கிறோம். இந்த ஞானம் இருப்பதால் எங்களுக்கு சமூக அஞ்ஞானம் இல்லை. இப்போ நாட்டில் நடப்பதும் ஒங்களுக்கு நடப்பதும் ஒரு தொற்றுநோயின் அறிகுறிகள். அறிகுறிகளை மட்டும் குறிவைத்தால், நோயை அழிக்க முடியாது."

பெருமாள்சாமி, தன் மகளை பார்த்தியா என்பதுபோல் பார்த்தார். பிறகு, "அடிக்கடி நீங்க வரணும் ஸார். உங்க பக்கத்துல இருக்கும்போது, எங்களை எதுவும், யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்பது மாதிரி தோணுது ஸார்." என்றார். மேகலா, இதற்குள் காபி கொண்டு வந்தாள். கண்ணன், அதைக் குடித்துவிட்டு எழுந்தார். இருவரையும் பார்த்து பொதுநோக்கில் பேசினார்:

“ஒங்களோட கஷ்டமும், நஷ்டமும் எனக்குப் புரியுது. ஆனாலும் இந்தக் காலத்துல, நாம் நியாயத்துக்கு அபராதம் கட்டித்தான் ஆகணும். நீங்க ஒங்களுடைய அனுபவப் பின்னணியில், எதிர்ப்படும் நிகழ்ச்சிகளை சமூக நிலையில் பார்த்தால் - அதைத் தனித்து நோக்காமல் பொது நோக்கில் பார்த்தால், இவ்வளவு தூரம் சுமை வந்திருக்காது. நீங்க தப்பு செய்யல. தப்புச் செய்தவங்க ஒங்களைத் தங்கள் ருபத்தில் காட்டுறாங்க. இது விநோதமான் நாடகம். இந்த நாடகத்தை நீங்க ரசித்துப் பார்க்கனுமே தவிர, இதன் பசிக்கு ருசியாயிடக் கூடாது. நான் வரட்டுமா"

"நீங்க அடிக்கடி வரணும் ஸார். எத்தனையோ பேருக்கு, நான் டீச்சர். ஆனால் ஒங்களுக்கு நான் ஸ்டுடன்டாயிட்டேன்."

"பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசப்படாது.

"பெரிய வார்த்தை இல்ல சார். ஒங்க ஞானத்துக்கு முன்னால நான் பேசினது சின்ன வார்த்தைங்க சார்."

"உடம்பைப் பத்திரமாய் பார்த்துக்கங்க. ஏன்னா, நம்மளை மாதிரி ஆட்களுக்கு ஒடம்புதான் மூலதனம் பணக்காரன் உடம்பைவிட நம் உடம்பு விலை மதிப்பற்றது. அவன் முடங்கினாலோ, போயிட்டாலோ, அவன் குடும்பகள சொத்து காப்பாத்தும்’

மேகலா, கண்ணனின் அருகே வந்து, அவரைப் பெறாமல் பெற்ற தந்தை போல் பார்த்தாள். பேராசிரியர். பெருமாள்சாமி, கண்ணன் எவ்வளவு சொல்லியும் கேளாமல், அவரை பஸ் நிலையத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/230&oldid=558837" இலிருந்து மீள்விக்கப்பட்டது