பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 * சத்திய ஆவேசம்

வழியனுப்பி வைக்க கூடவே போனார். "நான் ஒங்களுக்காக வரல. எனக்காகத்தான் வாறேன்” என்று சொன்னபடியே போனார்.

பேராசிரியர் திரும்பி வந்தபோது, மேகலா போர்க்கதிரை ஆனந்தமாய் படித்துக் கொண்டிருந்தாள். பேராசிரியர் அதைக் கேட்டபோது, அதை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் ஒடினாள். பேராசிரியரோ, மகளைப் பின்தொடர்ந்து, "ஒரே ஒரு தடவை படிச்சுட்டு தாறேம்மா, தாறேம்மா" என்று கெஞ்சினார். மேகலா, அதைக் கொடுக்காமலே உபதேசித்தாள்.

"இந்தப் பத்திரிகை எழுதியிருக்கிற எதிர்பார்ப்புக்கு தக்கபடி நாம் நடந்துக்கணும். அதுதான் நாம் செய்ற கைமாறு. ஒன்னால கெட்டேன், முத்தையாவால கெட்டேன்னு செளகரியமாய் பேசப்படாது."

பேராசிரியர், மகளை மாணவத்தனமாய் பார்த்து, அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார். அவளுக்கோ, முத்தையாவும் இந்த பத்திரிகையை படிப்பதற்கு வரவேண்டுமே என்ற விருப்பம். வரவில்லையே என்ற ஏமாற்றம். தந்தையிடம் தற்செயலாய் கேட்பது போல் கேட்டாள்.

"முத்தையாவை இந்தப் பக்கம் காணல" 'அவன் தங்கை கமலசுந்தரிக்கும், டுப்ளிகேட் முத்தையாவுக்கும் லவ் மாதிரியாம். பையன் வேற சாதியாச்சேன்னு, முத்தையா அம்மா யோசிக்குதாம். அவள் அப்பா நான் நொண்டிக்கிட்டு கிடந்தப்போ நம்ம சாதில எவண்டி வந்து பார்த்தான்னு கேட்கிறாராம். இதனால சில்லறைத் தகராறாம். இரண்டு பேரையும் சமாதானம் செய்யவும், கல்யாண ஏற்பாடு செய்றதுலயும், முத்தையா மும்முரமாய் இருக்கான். என்னைக் கூட வீட்டுக்குப்போய், அவன் அம்மாவுக்கு அட்வைஸ் செய்யச் சொன்னான். ஒன்கிட்ட இதை சொல்லலியா? ஆமாம் ஒன்கிட்ட எப்படிச் சொல்ல முடியும்? மேகலா, தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். முத்தையா, இந்த விவரத்தையும், இதற்கு மேலான விவரத்தையும் தன்னிடம் சொன்னது, அப்பாவுக்கு எப்படித் தெரியும்? ஒங்க தங்கை மனசாவது உங்களுக்குப் புரியுதே என்று நான் சொன்னதும், எல்லார் மனசும் என்க்குத் தெரியும். பேராசிரியர் ஜெயிச்சதும், இதுவும் ஜெயிக்கும் என்று அவர் பதிலளித்ததும் அப்பாவுக்கு எப்படித் தெரியும்? சொல்லத்தான் முடியுமா?

இரவு ஏழு மணிவரை, பேராசிரியரும், மேகலாவும் அந்தப் பத்திரிகையில் 'அந்த செய்தியை சுமார் முப்பது தடவை படித்திருப்பார்கள். மேகலாவுக்கு அடிமனதுள் புதைந்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/231&oldid=558838" இலிருந்து மீள்விக்கப்பட்டது