பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 220

முத்தையாவின் நினைவு, வெளி மனதில் புதுமலராய்ப் பூத்துக் கொண்டிருந்தது. பேராசிரியர் மொதல்ல சொல்லியிருந்தால், என் போட்டோவை கொடுத்திருப்பேனேன்னு சொன்னபோது மட்டும் மேகலா, தன் வயமாகி, ஆசையிலேயே மோசமானது பப்ளிஸிட்டி ஆசை. போதையிலேயே மோசமானது போட்டா போதை. இதனாலதான் வெட்னரி காலேஜ் எலெக்ஷன் போஸ்டர் குயின் மேரிஸ் காலேஜ் சுவர்ல. இருக்கு என்றாள்.

பேராசிரியர், மகளின் பேச்சை ரசனையோடு கேட்டுக் கொண்டிருந்தபோது

ஏழெட்டுப்பேர் வீட்டுக்குள் நுழைந்தார்கள். கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் குருநாதன், தா.முதல்வர் மாணிக்கம், ரசாயனப் பேராசிரியர் சுந்தரமூர்த்தி, வரலாற்றுப் பேராசிரியர் ராமானுஜம், உடற்பயிற்சி ஆசிரியர், அக்கெளன்டன்ட் ராமமூர்த்தி, இன்னும் இரண்டு மூன்று பேர், அவர்கள் வருகையை ஆச்சரியப்பட்டுப் பார்த்த பேராசிரியர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பேசப் போனார். ஏனோ பேச்சு வரவில்லை. மேகலா சமையல் அறைப்பக்கம் நின்று, தந்தையை பேசும்படி கைகளால் கீ கொடுத்தாள். அவரும பேசினார்:

"வீட்ட எப்படிக் கண்டு பிடித்தீங்க?."

"ஈஸியா முடிஞ்சுது."

"ஆமாம். இன்கம்டாக்ஸ் ரெய்ட் நடந்த ஊழல் பெருச்சாளிப் பிரின் ஸ்பால் வீடு எதுன்னு கேட்டிருந்தால்-எவன் வேணுமுன்னாலும் சொல்வானே?

எல்லோருக்கும் சுருக்கென்றது. மேகலா அப்பாவை கோபமாக முறைத்தாள். அவரோ, அவள் பக்கம் பார்க்கவில்லை. சிறிதுநேரம் கொடுர மெளனம் கோலோச்சியது. குருநாதன், தன்னை பார்த்தபடியே பேசினார்.

"இதுவரைக்கும் உங்களிடம் நாங்க பாராமுகமாய் இருந்தது உண்மைதான். தப்புத்தான். இதனாலயே ஒங்க மேல அனுதாபம் இல்லன்னு அர்த்தமில்ல. ஒருவேளை நீங்களும் எங்க பிரச்சனையில் ஈடுபடாமல் இருந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம். கொஞ்சம் வெளிப்படையாய் சொல்லப்போனால், பத்திரிகைச் செய்திகளை நாங்களும் கொஞ்சம் நம்பிட்டோம். இது அச்சடிச்ச எழுத்தோட ஆதிக்க காலம் பாருங்க. ஆனாலும், இன்னைக்கு அக்கெளன்டன்ட் ராமமூர்த்தி சொன்ன பிறகுதான் முழுவிவரமும் புரிஞ்சது. இன்னும் நாம் சிதறிக் கிடக்கக் கூடாது. காலேஜ் பிரச்சனையை, இன்கிரிமென்ட், எபிஷியன்ஸி டார் பிரச்சனையாய்ப் பார்க்காமல் கல்விப் பிரச்சனையாயப் பார்க்கணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/232&oldid=558839" இலிருந்து மீள்விக்கப்பட்டது