பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 222

பிடித்தாள். பேராசிரியா பிகு செய்யாமல் ஆனால், நிஜமாகவே நினைத்ததைத்தான் சொன்னார்:

"என்னோட சொந்தப் பிரச்சனையை இதுல கொண்டு வந்தால்."

வரலாற்றுப் பேராசிரியர் ராமானுஜம் விளக்கினார்.

"சொந்தப் பிரச்சனையை ஊர்ப் பிரச்சனையாக்கப்படாது. பட், ஊர்ப் பிரச்சனையை சொந்தப் பிரச்சனையாக்கலாம். ஸோ, சொந்த பிராப்ளமும், ஸோஷியல் பிராப்ளமும் இந்த விஷயத்தில் ஒரே காய்ன். எந்த விஷயத்தையும் சப்ஜெக்டிவ்வாய் பார்க்கப்டபாது. பட், அப்ஜெக்டிவ் அனாலிஸிஸ் என்கிறதுலகூட சப்ஜெக்டிவ் எலிமென்ட் உண்டு. அதுவும்."

"ஸார் நீங்க என்னதான் சொல்ல வாlங்க.."

"கிளாஸ் எடுக்கிறதும் இப்படித்தான். அப்புறம் பசங்க கலாட்டா பண்றாங்கன்னு புகார் வேறே."

குருநாதன், பொறுமையில்லாமல் பேசினான்.

"இப்போ தமாஷ் பேச டயம் இல்ல. இரவு ஒன்பது மணி அளவில் ஆசிரியர் கூட்டம் நடக்கப் போகுது. அவங்க கிட்டே சொல்லணும்."

பேராசிரியர் துள்ளிக் குதித்தார். அப்பாவு படுத்திய பாட்டையும், வாடிக்கையும் இதர பத்திரிகைகள் எழுதிய பாட்டையும், இன்கம்டாக்ஸ்காரன் நடத்திய பாட்டையும் ஆசிரிய சகாக்களிடம் 'ஒரு பாடு அழவேண்டும்போல் ஒரு ஆசை. ஆசிரியர் கூட்டத்துல கேட்டார்:

"ஏம்பா நான் பேசலாமா."

"ஏன் கூடாது?

"பேசி முடிக்க ஒரு மணிநேரம் ஆகும். பரவாயில்லையா?

"இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கிறோம். ஆனால் இப்பவே புறப்படனும்."

"மேகலா நீயும் புறப்படும்மா."

"நான் எதுக்கு."

"வாங்கம்மா"

"வாம்மா. அப்படியே முத்தையா வீட்டுக்கும் போயிட்டு வரலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/234&oldid=558841" இலிருந்து மீள்விக்கப்பட்டது