பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 * சத்திய ஆவேசம்

"சரிப்பா."

"அப்புறம் காபி, டீ." "இப்போ நேரமில்ல. நீங்க புறப்படுங்க மேடம்.”

"மேகலா, இந்தப் பத்திரிகையை எல்லாருக்கும் சத்தம் போட்டுப் படி.."

"நடந்துகிட்டே படிக்கலாம்."

"அதுவும் சரிதான். புறப்படு."

எல்லோரும் எழுந்தார்கள். மேகலா, அதோ அந்த எதிர் வீட்டுக்காரியை, கம்பீரமாய்ப் பார்ததபடியே கதவைப் பூட்டியபோது, முத்தையாவும் அங்கே வந்து விட்டான். எல்லோரும் அணிவகுத்து நடப்பதுபோல் நடந்தார்கள், கால்மணி நேர நடையும், ஒருமணி நேர பல்லவப் பிரயாணமுமாய், அவர்கள் வடசென்னைக்கு வந்து, ஒரு குறுக்குச் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் எதிரில் தென்பட்டவள்ைப் பார்த்து மலைத்தார்கள். வசந்தி:

மார்பாடை சரிந்திருப்பதை மனதில் கொள்ளாமல் கன்னத்தில் வழிந்தோடும் நீரைத் துடைக்காமல், அரைக்கண் பார்வையோடு, ஒடிக் கொண்டிருந்த வசந்தி, அவர்கள் எதிரில் நின்றாள். குருநாதன், பதட்டமாகக் கேட்டாள். -

"எங்கேம்மா போற? ஏன் இப்படி வேளகெட்ட வேளையில..."

வசந்தி, எல்லோரையும், ஒட்டு மொத்தமாகப் பார்த்துவிட்டு, பேராசிரியர் பெருமாள்சாமியை தனித்துப் பார்த்தாள். பிறகு, திடீரென்று கீழே குனிந்து அவர் காலைப் பிடித்தபடி கேவினாள். பதறிப்போன பேராசிரியர், அவளைத் தூக்கி நிறுத்தி, "என்னம்மா? என்ன விஷயம்" என்றார். அவள், கண்ணிரும் கம்பலையுமாய் சொல்லப் போனாள்.

娜 'அய்யோ கடவுளே! என் வாயால எப்படிங்கய்யா சொல்வேன்?

"சும்மா சொல்லும்மா. நான் ஒனக்கு அப்பா மாதிரின்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்"

"புண்ணியவானான ஒங்க மேல அப்பாவு பழி போட்டு எழுதிக் கொடுக்கச் சொன்னாரு. நான் முடியாதுன்னேன். வாடிக்கை பத்திரிகைக்காரன், எங்க அப்பாவுக்கு ஆசை வார்த்தை காட்டினான். அப்பா முடியாதுன்னதும் போலீஸ் வச்சு மிரட்டினான். அப்பா மசியல. இன்னைக்கும் அப்பாவு என்னைக் கூப்பிட்டு மிரட்டினாரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/235&oldid=558842" இலிருந்து மீள்விக்கப்பட்டது