பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்யைா, வீறாப்பாக இருப்பதுபோல் விறைத்துக் கிடந்தார். உயிரோடு இருந்ததை விட உயிரற்ற இப்போதுதான், அவரைவிட, அவர் பிணம் வலிமை மிக்கதாகி விட்டதை உணர்ந்ததுபோல், இன்ஸ்பெக்டர் திம்மையா, பிணக்களையோடு நின்றார். அந்தச் சடலத்தைப் பார்க்க முடியாமல் பார்த்தார். பொய்மையை எரிக்கப் பறுப்பட்டதுபோல், சூரியக் கட்டிகளாய், கீழே விழப்போவது போல், உருண்டு நின்ற கண்களைப் பார்த்ததும், தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டார். ரத்தப் பிரவாக வாய்க்கு வெளியே, வேல்போல் வெளிப்பட்ட கன்னையாவின் செஞ்சிவப்பு நாக்கைப் பார்த்ததும், தன் நாக்கை உள்ளே இழுத்தார். உடம்பை, விறைத்துப் பிடிப்பது போல் கூர்மைப்பட்டு நின்ற அந்த முன்னாள் மனிதரின் கால்களைப் பார்த்ததும், எப்போதுமே மனிதராக அல்லாமல் போன திம்மையாவின் கால்கள், இடுப்பிற்குக் கீழே தொங்குவது போல் தோன்றின. வாய் வழியாய் பொங்கிய ரத்தம், மோவாயில் உறைந்து கிடக்க, காதுகள் ரத்த சாட்சியாய் பிய்ந்து கிடக்க, வயிற்றுக்குக் கீழே உடுப்பையும் நனைத்து வெளிப்பட்ட ரத்தக் கோடுகள், கால் முட்டிகளை பாளம் பாளமாய் சூழ, என்ன ஆனாலும் சரி, ஒன்னை விடப்போவதில்லை என்பதுபோல் கன்னையா முறைப்பது மாதிரி இன்ஸ்பெக்டருக்குப் பட்டது. சுற்று முற்றும், கைகளை நெறித்தபடி, பூட்ஸ் கால்களைத் தேய்த்தபடி, கண்களே இல்லாததுபோல் அவர்களை சொருகிக் கொண்ட ஐந்தாறு போலீஸ்காரர்களையும், சப்-இன்ஸ்பெக்டர் டேவிட்டையும் பார்த்துவிட்டு, அவர்கள் மெளனித்து சுமத்திய கொலைக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாமல், மீண்டும் அந்தப் பிணத்தையே பார்த்தார்.

"எப்படி செத்திருப்ான்? சாவடியாய் அடிக்கலியே. ஒருவேளை பூட்ஸ் கால் படாத இடத்தில் பட்டிருக்குமோ? ஒருவேள. தான் பெற்ற பெண். தன் முன்னாலேயே கற்பழிக்கப் படலாமுன்னு பயந்து, இருதயம் தானாய் நின்னுருக்குமோ?

இன்ஸ்பெக்டருக்கு, கன்னையாவின் மீதே கோபம் வந்தது.

"யூஸ்லெஸ் பெல்லோ பேக்டரி ஒர்க்கராம் பேக்டரி ஒர்க்கர். உடம்பை இப்படியா பூஞ்சையாவா வைக்கிறது? ரவுடிகளுக்குக் கொடுக்கிறதுல, பாதிதான் கொடுத்தேன். இதைக்கூட தாங்கிக் காட்டா, என்னய்யா மனுஷன்? ஸ்கவுண்ட்ரல்... எந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/237&oldid=558844" இலிருந்து மீள்விக்கப்பட்டது