பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 226

பெரியமனுஷன் கிட்ட இதைச் சொல்லலாம்? அப்பாவுவா? வாடிக்கை ஆசிரியரா? எவனும் உதவிக்கு வரமாட்டானே..?

இன்ஸ்பெக்டர் குழம்பிப்போய் நின்றபோது, கான்ஸ்டேபிள் தங்கராஜ், தன்னை இன்ஸ்பெக்டர் இடத்தில நியமித்துக் கொண்டு, இன்ஸ்பெக்டரை தன்இடத்திற்கு தள்ளி விட்டுவிட்டு, ஆத்திரமாகக் கேட்டார்:

"அடிக்கலாம். அடிக்கதுக்குத்தான் நாம் இருக்கோம். அதுக்காக இப்படியா? ஒங்களுக்காக நாங்க தாலியறுக்க முடியுமா?

இன்ஸ்பெக்டர், அவரை யாசகமாகப் பார்த்தார். இதர போலீஸ் சகாக்களையும் பரிதாபமாக நோக்கினார். இனிமேல், உத்திரவிட வேண்டியவர்கள் அவர்கள்தான் என்பதுபோல் கிட்டத்தட்ட சலூட் அடிக்கக் கூடப் போனார். இதற்குள் இன்னும் ஏதோ பேசப்போன தங்கராஜை கண்டித்து வயதான சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அதட்டலாகப் பேசினார்.

"என்ன தங்கராசு அய்யாவை எதிர்த்துப் பேசுற அளவுக்கு வந்துட்டியா? அவர் செய்தது சரியில்லதான். அதுக்காக காட்டிக் கொடுக்க முடியுமா? ரெவின்யூ டிபார்ட்மென்ட்காரனைப் பார்; பத்திரிகைக்காரங்களைப் பார்: சேல்ஸ்டாக்ஸ்காரனைப் பார்; எவனாவது தன் டிபார்ட்மென்ட் ஆட்களைக் காட்டிக் கொடுக்கானா? காட்டிக் கொடுக்கிற ஒரே டிபார்ட்மென்ட் நம்ம டிபார்ட்மென்ட் தான் மனுஷன்னா நன்றி விசுவாசம் வேணுமிய்யா. நீ கூட ஒரு தடவை, மப்டில இருக்கும்போது, சினிமா தியேட்டர்ல பிக்பாக்டெட் அடிச்சே, ஜனங்க உன்னைப் பிடிச்சு, இப்போ இளக்காரமாய் நினைக்கிறியே இந்த இன்ஸ்பெக்டர்கிட்டே ஒப்படைச்சாங்க. அய்யா ஒன்னை உள்ளே தள்ளினாரா? ஆக்ஷன் எடுத்தாரா? கன்னையாவை, எல்லாரும் அடிச்சோம். நீதான் பலமாய் அடிச்சே. அடிக்காத ஒரே ஆள் நான்தான். எதுக்குச் சொல்றேன்னா, விவகாரமுன்னு வந்தால் எல்லாரும் மாட்டிக்கனும்?"

கான்ஸ்டபிள்கள் வாயடைத்தார்கள். தலைகுனிந்து நின்ற இன்ஸ்பெக்டரின் மார்பில் முதுகுபட நின்ற சப்இன்ஸ்பெக்டர் டேவிட் ஆணையிட்டார்:

"திரிநாட் ஒன் இவர் மகள் வசந்தியை இட்டுனு வரப்போன நம்ம ஆட்களை, போய் திருப்பிக் கூட்டிவா. கவலப்படாதீங்க ஸார். மொதல்ல, பாடியை எப்படி டிஸ்போஸ் செய்யுறதுன்னு யோசிப்போம். எனக்கு ஒரு ஐடியா. கன்னையாவை பேக்டரிகாரன் கொடுத்த புகார்மேல அரெஸ்ட் செய்தோம். அவன், முன்பு எந்தக் குற்றமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/238&oldid=558845" இலிருந்து மீள்விக்கப்பட்டது