பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 * சத்திய ஆவேசம்

செய்யதவனாயும் இருந்ததால், அவனுக்கு விலங்கு போடல. நாற்காலி யில் உட்கார வச்சோம். ஒண்ணுக்கு வருதுன்னு போனவன் திரும்பி வர்ல. எப்படியோ தப்பிச்சிட்டான். நாம் கன்னையா வீட்டுக்குப் போகப் போறோம். கன்னையாவை எங்கே மறைச்சு வச்சிருக்கிங்கன்னு அதட்டப் போறோம். அவங்களை ஸ்டேஷன்ல கூட்டி வந்து விசாரிக்கப் போறோம். அத்தனை ஸ்டேஷன்களையும் அலர்ட் செய்யப் போறோம். இதுக்குள்ளே எப்போதும் யோக்கியமாய் நடந்துட்டு, ஒரே ஒரு நாள்ல திருடனாய் போயிட்டோமேன்னு கன்னையா, மானத்துக்குப் பயந்து, கூவம் ஆற்றுல விழுந்து, தற்கொலை பண்ணிக்கிறான். இவ்வளவுதான் விஷயம். இதுக்குப் போய் நீங்க. டேய். பிணத்தோட கண் மேல துணியைப் போடுடா

'கூவத்துல பிணம் மிதந்தால் அது போலீஸ்காரன் வேலையாய்த்தான் இருக்குமின்னு ஜனங்களுக்குத் தெரிஞ்சிடும். அதனால, போனமாசம் ஒருத்தன் மேல, நாமே திராவகத்தை ஊற்றிட்டு கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் கேஷவைால்டி வார்ட்ல சேர்க்காமல், ஒ.பி.வார்ட் வாட்ச்மேனை மிரட்டி, அதுல போட்டுட்டு வந்தோமே, அப்படிப் போட்டுடலாம்."

ஒனக்கு மூளை இருக்குதா தங்கராசு? அவன் பிழைச்சுக்குவான் என்கிற தைரியத்துல, ராத்திரியோட ராத்திரியாய் ஒ.பி.வார்ட்ல போட்டோம். ஆசாமி பிழைச்சுக்கிட்டதால, டாக்டர்களும் மூச்சு விடல. ஆனால் இது மூச்சுப்போன கேஸ்"

"சரி, ஏதாவது கிணத்துல எறியலாம். அப்போதுதான் கீழே விழும்போது உடம்புல அடிபட்டிருக்குமுன்னு, காயங்களுக்குச் சாக்கு சொல்ல வழி"

திடீரென்று, கன்னையாவின் மனைவியையும் மகளையும் அழைக்கப்போன இரண்டு போலீஸ்காரர்கள் சலூட் அடித்தார்கள். சப்-இன்ஸ்பெக்டர், ஆத்திரமாய் கேட்டார்.

"நீங்க மனுஷங்களாய்யா? பிணத்தைப் பார்த்துட்டு பேசாமல் போயிருக்கிங்க?"

"லாக்கப்புல இருக்கவங்க சொன்னாங்க ஸார். நாங்க போனபிறகு, இன்ஸ்பெக்டர் அய்யாவும். நீங்களுமாய்."

"இந்தாயாரு. ஒனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல என்கிறது மாதிரி பேசாதே. அது போகட்டும், இதுக்குள்ள லாக்கப் பசங்களுக்கு, இந்த இழவு விசயம் எப்படிய்யா போச்சு? சரி. எப்படி போச்சுதோ.. லாக்கப் பசங்ககிட்டே நல்லாவே சொல்லிடுங்க. வாயை வெளியில் விற்காமல் இருந்தாங்கன்னா, அவங்க மேல் புக்கான கேஸ் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/239&oldid=558846" இலிருந்து மீள்விக்கப்பட்டது