பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் - 12

பிரபு, இடைமறித்தான். "இவன் ஒருத்தன். இப்படிச் சொன்னால், இவங்க இங்கேயே நிற்பாங்க. ஏன்னா, இவங்க வந்ததே வம்பிழுக்கத்தான். இப்போதான் வம்ப துவக்கி இருக்காங்க முடியுறது வரைக்கும் நிற்பாங்க."

அந்தப் பெண்ணின் முகம் வெளுத்து, கண்களும் வெளுக்கப் போவது போல் தோன்றியது. சூடாகக் கேட்டாள்

"ஒரு நியாயத்துக்குப் போராடும்போது, இன்னொரு அநியாயம் அந்தப் போராட்டத்துல முளைக்காமல் பார்த்துக்கனும் இல்லன்னா, போராட்டத்தோட வெற்றியே, தோல்வில முடியும். நீங்க என்னைத்தான் கோபமாய் கேட்கிறீங்களே தவிர, இந்த அமளிக்கு என்ன காரணமுன்னு விசாரிச்சிங்களா? காரணத்தைப் பார்க்காமல், காரியத்தை மட்டும் பார்த்தால், அந்தக் காரியமே, பல அநீதிகளுக்குக் காரணமாய் மாறிவிடும்."

"போச்சுடா. இங்கேயுமா லாஜிக் கிளாஸ்?" எங்கிருந்தோ ஒருத்தன் கமெண்ட் அடிக்க, அதில் எல்லோரும் சிரிக்க, அந்தச் சிரிப்பு, முத்தையாவின் முகத்தில் புன்னகையாகத் தொற்றிக் கொண்டது. அதை அடக்கிக் கொண்டே சரி. நீங்களே சொல்லுங்களேன் என்றான்.

என் பாதரை, ஸ்டுடன்ஸ் அடி அடின்னு அடிச்சு. கையை முறிச்சுட்டதா வீட்டுக்கு போன் வந்தது. அப்போகூட அப்பாவுக்கு நல்லா வேணும், ஸ்டுடன்ஸை அநியாயமாய் எக்ஸ்பெல் பண்ணினால், இப்படித்தான் நடக்குமுன்னு போன் செய்தவர்கிட்டயே திருப்பிக் கத்தினேன். ஆனாலும், என்னால் மகளாய்த்தான் இருக்க முடியுதே தவிர. மாணவியாய் இருக்க முடியல. அலறி அடிச்சு, இங்கே வந்தேன். அப்பாவுக்கு எப்படி இருக்குன்னு போலீஸார் கிட்ட கேட்டேன். அவரு ஒண்னும் ஆகலன்னு சொன்ன பிறகுதான் உயிர் வந்தது.எதுக்கும், அப்பாவைப் பார்த்துட்டுப் போகலாமுன்னு வாசலுக்குள் நுழையப் போனபோது, இவரு. என்ன வார்த்தை சொன்னார்னு கேளுங்க. நீங்களே கேளுங்க.

அவளால், மேற்கொண்டு பேச முடியவில்லையோ, பேச விரும்பவில்லையோ. வார்த்தைகள் வராமல் நின்றாள்.

மாணவர்கள் மத்தியில் நெடிய மெளனம்.

"சரி. நானே சொல்றேன். இந்த பிரின்ஸ்பால், கடைசில. டிரஸ்ட்போர்ட் சேர்மனுக்கு, தன் மகளையே. கேளுங்க மிஸ்டர். அவரையே கேளுங்க.."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/24&oldid=558627" இலிருந்து மீள்விக்கப்பட்டது