பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 228

ஒண்ணுமில்லாமல் ஆயிடுமுன்னு சொல்லு. இல்லன்னா, அவங்களும் குடும்பத்தோட ஒண்னுமில்லாம ஆயிடுவாங்கன்னு நல்லாவே சொல்லிடு. "சரி. கன்னையா வீட்டுக்கு நீங்க போரீைங்களா.."

“தேவை இல்ல ஸார். கன்னையா மகள், ஒரு கும்பலோடு, நம்ம ஸ்டேஷனைப் பார்த்து வந்துட்டு இருக்காள் ஸார்."

"அட முதேவி. இதை மொதல்ல சொல்றதுக்கு என்ன? இதற்குள், வெளியே கசாமுசா சத்தம் கேட்டது. இன்ஸ்பெக்டர் இருக்காரர்? என்ற அதட்டல் ஒலி திம்மையா, டேவிட்டை தன்னோடு வரும்படி சைகை செய்தார். அந்தப் பழுத்த சப்போ, அவரைப் போகும்படி பதிலுக்கு சமிக்ஞை செய்தார். அதே சமயம் "நான் இருக்கேன் பயப்படாதீங்க" என்று தன் கரங்களை எடுத்து மார்பில் பூட்டி கைப் பெருவிரலை உயர்த்திக் காட்டினார் இன்ஸ்பெக்டர். காலமான கன்னையாவை காலன்போல் பார்த்தபடி, அடிமேலடி வைத்து வெளியே வந்தார்.

காவல் நிலைய முகப்பறையில், பேராசிரியர். பெருமாள்சாமி, கல்லூரி ஆசிரியர்கள் அணிவகுத்து நிற்பதுபோல் நின்றார்கள். இவர்களுக்கு, இடது பக்கம் முத்தையா, தனித்து நின்றான். வலதுபக்கம், வசந்தி, மேகலாவின் தோளில், தலையை புரட்டியபடியே, "எப்பா. எப்பா" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் கண்னெல்லாம் நீரோட்டம். கழுத்தெல்லாம் அதன் தடயங்கள். மேகலா அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அவள் முகத்தை நிமிர்த்தி, கண்ணிரை துடைத்துவிட்டு, தன்னோடு சாத்திக் கொண்டாள்.

இன்ஸ்பெக்டர் திம்ைையா, நகங்களை உள்ள்ே இழுத்துக் கொண்டு நடக்கும் பூனைபோல், பூட்ஸ் கால்கள் ஒலி எழுப்பாதபடி நடந்து வந்தார். பயந்தாங்கொள்ளிதான் அதிகமாகக் கத்துவான் என்பதற்கு எடுத்துக்காட்டாய்க் கத்தினார்.

"யார் நீங்க? என்ன வேணும்.?

வசந்தி, திடீரென்று, மேகலாவின் தோளில் கிடந்த தன் முகத்தை வீறிட்டுத் துக்கினாள். திம்மையாவை, சுட்டெரித்துப் பார்த்தாள். அழுகை ஆவேசமாகி, வார்த்தைகளாயின.

"இவங்களை தெரியாமல் இருக்கலாம், என்னையுமா தெரியல? எங்கே, என்னைப் பார்த்துச் சொல்லுங்க. எங்கப்பாவை; எங்கே..? நான்.... இப்பவே பார்க்கணும்... எப்பா.... எப்பா... நாங்க வந்துட்டோம்பா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/240&oldid=558847" இலிருந்து மீள்விக்கப்பட்டது