பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 * சத்திய ஆவேசம்

என்கிறான். அப்பாவு நான் உங்களை கொல்லவா சொன்னேன்னு கூலாய் கேட்கிறான். நீயும் என்னைக் கைவிட்டால். வேனுமின்னால், இந்த கன்னையாவை நான் அடித்துக் கொன்றது மாதிரி, நீயும். என்னை. ஒரேயடியாய்."

"ஸார். ஸார். ஒங்களை கோபிக்க எனக்கு உரிமை இல்லையா ஸார்? யார் கைவிட்டாலும், ஒங்களை நான் விடமாட்டேன் ஸார் கவலைப்படாதீங்க ஸார். ஒங்களை கைவிட்ட ரெண்டு தேவடியா பசங்களையும் விடப் படாது ஸார். அது அப்புறம். இப்போ. பிணத்தை மொதல்ல திருவொற்றியூர் சவுக்குத் தோப்புல இருக்கிற ஒரு கிணத்துக்குள்ளே போடுவோம். பப்ளிக் கம்ப்ளெயின்ட் வந்ததும், அப்பாவுவையும், வாடிக்கை ஆசிரியரையும் சந்தேகத்தின் பேர்ல கைது செய்து, கம்பி எண்ண வச்சுடலாம் ஸார். இதுக்கா கண்ணிர் விடுறிங்க? இந்தாய்யா. வேனை எடுத்துவா."

போலீஸ்வேன், பின்பக்கம் வந்து நின்றது. கம்பீரப்பட்டுக் கிடந்த கன்னையாவின் சடலத்தை, போலீஸ்காரர்கள் துரக்க முடியாமல் தூக்கி, வேனுக்குள் கிடத்தினர்ர்கள். பின்னால், பஞ்சபாண்டவ போலீஸ்காரர்கள் ஏறிக் கொண்டார்கள். முன்னிருக்கையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏறினார்கள்.

லாக்கப் வாசிகள் நிசப்தத்தில் கரைந்து கொண்டிருந்தார்கள். பறவைகள் பம்பிக் கிடந்தன. போக்குவரத்து முடங்கிக் கிடந்தது. அப்போது

போலீஸ் வேன் ராஜகம்பீர தோற்றத்துடன், சவுக்குத் தோப்பை நோக்கி, ரதம் போல் நகரத் துவங்கியது.

முதலாவது ஆட்டத்தில் இருந்து பலர் திரும்பிக் கொண்டும், இரண்டாவது ஆட்டத்திற்குப் போய்க் கொண்டும், சினிமாத்தனமான நடமாட்டம் கொண்ட இரவு வேளை.

கோடம்பாக்கத்தில், குறுகலான ஒரு முட்டுச் சந்தின் மூன்றாவது வீட்டில் நான்காவது போர்ஷன் வீட்டுக்காரி மின்சார மெயினை 'ஆப்' செய்து விட்டதால், லாந்தர் விளக்கு லாட்டரி அடித்துக் கொண்டிருந்த அந்த அறையில் முலைச்சுவரில் முளி போல் உட்கார்ந்திருந்த அவள், கார் சத்தம் கேட்டு ஓடி வந்தாள்.

மாலை ஆறு மணியில் இருந்து, இப்படித்தான் அவள் அல்லாடிக் கொண்டிருக்கிறாள். சரியாக மாலை நாலு மணிக்கு, சினிமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/243&oldid=558850" இலிருந்து மீள்விக்கப்பட்டது