பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 232

அளிஸ்டெண்ட் டைரக்டர் என்றும் புரடெக்ஷன் நிர்வாகி என்றும் கூறப்படும் ஒரு கிருதாத் தலையன், அவளிடம் வந்தான். "எங்க யூனிட் குற்றாலத்துக்கு, அவுட்டோர் ஷ்ட்ைடிங் போகுது, நீயும் வாரே. பத்துநாள் படப்பிடிப்பு. நீ கதாநாயகியின் காய்யச்சல்கார அம்மா செத்த பிறகு, வண்டியில இருக்கிற பிணமாய் வாரே. கதாநாயகிக்கு அம்மாவா நடிக்கிற காந்தா, பிணமாய் நடிக்க சம்மதிக்கல. அதனாலே.... அவளுக்கு டுப் நீ. கட்டையில வச்ச பிறகு, கதாநாயகனின் புதுமையான, புரட்சிகரமான வைத்தியத்தாலே, பிணம். உயிரோடு எழும்போது காந்தா நடிப்பாள். என்றான். அவள் அட்வான்ஸ் என்று வாய்க்கு வெளியே வரப்போன வார்த்தையை வெற்றிலையாக்கினாள். அவள் தன்னை அன்போடு பார்த்ததைக் கண்ட புரடக்ஷன் நிர்வாகி, "கரெக்டா ஆறு மணிக்கு வேன் வரும். என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

ஆனால் இப்போதோ, மணி கிட்டத்தட்ட இரவு பத்து. வேனைக் காணவில்லை. இது சினிமா உலகில் சகஜம் என்பதும் அவளுக்குத் தெரியும். இவளைப்போல், பல எக்ஸ்டிரா நடிகைகளிடம் இப்படிச் சொல்லிவிட்டு பிறகு எவளையாவது ஒருத்தியை, பிக்கப் செய்து கொள்வார்கள் என்பதும் அவளுக்கு அனுபவப் பாடம். ஆனாலும், மனம் கேட்கவில்லை.

ஒட்டைப் பல் தெரிய, கார் சத்தம் கேட்கும் போதெல்லாம், கதவோடு கதவாக முன்னுக்கு வந்து பார்த்த அந்தப் பெண், இனிமேலும் நின்றால், வீட்டுக்காரம்மா காட்டுக்காரம்மாகி விடுவாள் என்று பயந்து, வீட்டுக்குள் வந்து, கிழிந்த பாயையும், பிய்ந்த தலையணையையும் எடுத்துப்போட்டு, காலை நீட்டிப் போட்டு, கரங்களை விரித்துப் போட்டு, உட்கார்ந்தாள். கார் சத்தம் கேட்கும் போதெல்லாம் காதுகளை கூர்மையாக்கி, யாரும் தன்னை நோக்கி வருவதன் அடையாளமாய் செருப்புச் சத்தம் கேட்கிறதா என்று உன்னிப்பாய் பார்த்தாள். இறுதியில், மன உளைச்சல் வயிற்றுப் பசியை தின்ன, அப்படியே தூங்கிப் போனாள். பிணம் போலவே கிடந்தாள். அதே கருவாட்டு உடம்பு, அதே வட்ட முகம், சுருட்டைத்தலை, நெஞ்சு நிறையாத மார்பகம். அவள், வேறு யாருமல்ல, அப்போது மரிக்காமல் இருந்த கன்னையா, வாடிக்கை அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது, அவரை மறிக்காமல் மறித்தவள்.

மல்லிகா, துங்கிப்போய் விட்டாள். இரவு இரண்டு மணியளவில், அவள் கனவில் சினிமா வேன் வந்தது. திடுக்கிட்டு கண் விழித்தாள். சுற்றுப்புறத்தை வெறுமையாகப் பார்த்தாள். அதே சமயம் ஒரு வேன் சத்தமும் வெளியே கேட்டது. துள்ளியெழுந்து, முகத்தை துடைத்தபடியே, வெளியே வந்து, மாடியில் உள்ள வீட்டுக்காரிக்குக் கேட்க முடியாதபடி, தெருக் கதவை மெல்லத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/244&oldid=558851" இலிருந்து மீள்விக்கப்பட்டது