பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 * சத்திய ஆவேசம்

திறந்து வாசல் கதவாய் நின்றாள். வேன் ஒன்று மெயின் வீதியில் காச்சு மூச்சென்று கத்தியது. சந்தோஷ மனத்தோடு, அங்கே அவள் ஒடியபோது, அதுவும் ஒடியது. கண்களைக் கசக்கியபடியே அவள் உள்ளேப் போகப் போனபோது, ஒருவர் நடந்து வந்தார். ஒரு வேளை அது வருதா?

வந்தவர்களில் 'அது' இல்லையென்றாலும், அவள் இன்பப்பட்டாள். பிடித்தமான ஒருத்தரை அடையாளம் கண்டுவிடட ஆனந்தம். இந்த தெருவே, அவளை சதை சதையாய் கூறிட்டுப் பார்க்கும்போது இந்த ஒருத்தர் மட்டும் அவளைப் பரிவோடு பார்த்து, ஆறுதலாகப் பேசுபவர். அவரோடு முப்பது நாட்கள்தான் பரிச்சயம் என்றாலும், முப்பது ஆண்டு காலமாய் பழகியது போன்ற அனுபவப் பெருக்கு. தந்தையை அவரிடம் கண்டது போன்ற உணர்வு. ஆனந்தமயமாய் கூவினாள்

"கண்ணன் ஸாரா? இந்நேரத்திற்கு எங்கே போயிட்டு வாரிங்கோ?"

கண்ணன், துல்லியமாய் சிரித்துச் சொன்னார்.

"செகண்ட் ஷோ சினிமா." "நீங்ககூட படம் பார்ப்பீங்களா? என்ன படம்?"

“ஊருக்கு நல்லவன்.” விமர்சனம் எழுதுறதுக்காக பார்க்கபோனேன் வழியில். ஒன் தலையைப் பார்த்திட்டு திரும்புறேன்." "ஒங்களுக்கு விஷயம் தெரியுமா ஸாரே இதுல கதாநாயகனாய் நடிக்கிற சிங்கராஜா ஒரு காலத்துல, என்னோட இருந்தவன். ஒரு டீயை பாதிப் பாதியாய் சாப்பிட்டவங்க சூட்டிங்ல கிடைக்கிற காசுல, நான் பட்டினி கிடந்தே அவனுக்கு வாரிப் போட்டேன். அப்புறம் எப்படியோ முன்னேறிட்டான். ஒரு தடவை அவனைப் பார்க்க பங்காவுக்குள்ளே போனேன். கூர்க்காவை வச்சே துரத்திட்டான். அதுவும் வீட்டுக்குள்ளே வச்சு சோறு போட்டவளை எப்படியோ நன்றியில்லாம போயிட்டாலும் நல்லா இருக்கட்டும் ஒரு வேளை நன்றிக் குணம் இருந்திருந்தால், அவனால் கதாநாயகனாய் - கதைவசன கர்த்தாவாய் ஆகியிருக்க முடியாதோ என்னவோ நீங்க. ஏன் ஸாரே கண் கலங்குறிங்க? இதெல்லாம் சினிமா உலகத்துல சகஜம். நான் பைத்தியம் மாதிரி பினாத்துறேன். போவட்டும்."

கண்ணன், அவளை ஆற்றுப்படுத்தினார்.

'நீ போய் தூங்கும்மா. எங்க கலைக்குழுவுல, ஒன்னை சேர்க்க

முயற்சி செய்யுறேன். அதுல பணம் கிடைக்காட்டாலும் பண்பாடு கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/245&oldid=558852" இலிருந்து மீள்விக்கப்பட்டது