பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 234

கண்ணன், சொன்ன வேகத்திலயே போய்விட்டார்.

இதற்குள் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. கண்ணன் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற மல்லிகா, முதலில் ஜீப்பைக் கவனிக்கவில்லை. ஜீப்பில் இருந்து இறங்கிய கான்ஸ்டேபிள் தங்கராக, அவளை குருரமாய் பார்த்தபடியே, அறைக்குள் வந்தான். வழக்கம் போல் சாப்பிட்டியாம்மே. என்று கேட்கிறவன், அவளை, உஷ்ணத்தோடும், சாராயக் கோபத்தோடும் பார்த்தான். மல்லிகா திகைத்தபோது, தங்கராஜ் கத்தினான்:

"நாயைக் குளிப்பாட்டி நடுவிட்ல வச்சாலும் அது காள் காளுன்னு கத்துறதை விடாதாம்."

"வீடு என்னது நீ யாரய்யா. சொல்றே.? "என்னமே. சவுக்குத் தோப்பு கிணத்துல ஒன்னை வீசனுமா?

"வாயில வசைச் சொல் வராமே பார்த்துக்கய்யா. ஏதுக்குய்யா என்னை நாயின்னே? இப்பவே எனக்குத் தெரியணும்."

"ஏன்மே, நடிக்கிறே? அந்த வேட்டி, இந்த போலீஸ் யூனிபாரனத்தோட ஒனக்கு ஒசத்தியா போயிட்டு இல்லயா. தத்தேறி முண்ட சந்தேகக் கேஸ்ல புக்கான ஒன்னை பராமரிக்கேன் பாரு: இதுவும் செய்வே, இன்னமும் செய்வே. ஒன்னை சவுக்குத் தோப்புல."

"யோவ். இந்த மாதிரி இன்னொரு தடவ சொன்னே, அப்புறம் நீயுமாச்சு. நானுமாச்சு. சொல்றதை நல்லா கேளுய்யா. நான் கண்ணகின்னு ஒன்கிட்டே எப்பவும் சொல்லல. அதே சமயம். யார் யார். என்னை. என்ன கோலமெல்லாம் செய்தாங்கன்னு சொல்லி இருக்கேன். ஒருத்தன். ஒன்னை மாதிரி ஒரு அல்பம். என் பல்லை உடைச்சதைக்கூட சொல்லிட்டேன். தோ. பாருய்யா. நான், நளாயினி இல்லே. அதே சமயம். ஒருத்தனுக்கு சின்ன வீடாய் இருக்கப்டோ. அந்த ஒருத்தனுக்கே விசுவாசமாய் இருக்கிறவள், தெரிஞ்சுக்கோ."

'அப்படின்னா, அந்தப் வேட்டிக்காரன் ஒன்கிட்டே வாலாட்டுனானா? பட்டுன்னு சொல்லுமே. மகளை எழுதிக் கொடுக்காமல் செய்த அவன் கன்னையாவை, எங்க திம்மையா கொன்னது மாதிரி கொன்னு, அப்புறம் நாங்க சவுக்குத் தோப்பு கிணத்துலு வீசுனது மாதிரி வீசிப்புடுவன்ே. டேய். டாய். டேய். டாய் பசங்களா"

மல்லிகா, அசைவற்றாள். கன்னையாவா.. எந்தக் கன்னையா?

"யோவ். பூஞ்சை உடம்பா இருப்பாரே, அந்த கன்னையாவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/246&oldid=558853" இலிருந்து மீள்விக்கப்பட்டது