பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 236

அவள், அப்போது எதிர்பார்ககாத சினிமா வேன். வேனே பேசுவதுபோல், புரெடெக்ஷன் நிர்வாகி, உள்ளிருந்தபடியே குரலிட்டாள்.

"ஏறு மல்லி, ஏற்கெனவே லேட்டு நி எப்படியும் ரெடியாய் இருப்பேன்னு டைரக்கடர்கிட்டே சொன்னேன்."

மல்லிகாவிற்கு, ஒரு சபலம். இந்த விஷயத்தை வெளியே சொன்னால், இது எதில் கொண்டுபோய் விடுமோ? அதோட அதுக்கு துரோகம் பண்றது மாதிரி நடக்கப்படாது. நமக்கு ஏன் வம்பு? பத்து நாளைக்கு வயிறு நிரம்பும். குருவியை வச்சு குருவியை பிடிச்சது மாதிரி, இந்த சூட்டிங் ஷெடுலை வச்சு இன்னொரு ஷெடுல பிடிக்கலாம். அதெப்படி? ஒரு குடும்பம் நடுத்தெருக்கு வந்துட்டு. ஒரு உத்தம மன்ஷன் உயிரு, துள்ளத் துடிக்கப் போயிட்டு என் வயிற்றைப் பார்த்தால், கன்யைா மகளோட உயிரு என்னாகும்?

"ஏன் மல்லி யோசிக்கிறே?"

"நான் வர்லிங்கோ."

"ஏய் சாவுக்கிராக்கி சாயங்காலம் நான் சொன்னப்போ, வாய்ல என்னத்த வச்சுட்டு இருந்தே?”

"ரெஸ்பெக்ட் கொடுத்து, ரெஸ்பெக்ட் வாங்குங்கோ." "பொல்லாத ரெஸ்பெக்டு. புறம்போக்கு அய்யோ பாவமுன்னு பார்த்தால், அவ்வளவு திமுரா? இனிமேல். நீ. எந்தப் படத்துல நடிக்கப் போறேன்னு பார்த்துடலாம்?

"அட சாத்தான் போய்யா இப்போ, நீ கதாநாயகி வேடம் கொடுத்தாக்கூட நான் வரமாட்டேன்."

"நீ கெட்ட கேட்டுக்கு. இந்தாப்பா. வண்டிய எடு."

வேன், கோபப்பட்டது போல், உருமியபடி, நேராய் ஒடியபோது, மல்லிகா குறுக்காய் ஒடினாள். பிணமாக நடித்து காசு வாங்குவதைவிட, பிணமாகி, நியாயத்தை வாங்கலாம் என்ற ஆவேசத்தோடு, சவுக்குத் தோப்பு இருக்கும் இடத்தையும், அதற்குள் இருக்கும் பாழ் கிணற்றின் அடையாளத்தையும் தங்கராசு, விளக்கமாக சொன்னபோது மனதுக்குள்ளேயே குறித்துக்கொண்டாள்.

அவள் பாதை புரிந்தவள் போல் ஒடிக் கொண்டிருந்தாள். கண்ணனின் வீடு அவளுக்குத் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/248&oldid=558855" இலிருந்து மீள்விக்கப்பட்டது