பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னையா வீணடிக்கப்பட்ட, அந்தத் தொழிற்சாலையில் முதல் வழிப்ட் துவங்கபோன காலை நேரம்,

தொழிற்சாலை வளாகத்திற்குள்ளேயே இருந்த சங்கக் கட்டிடத்திற்குள், தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருந்தனர். வேறு வேறான அரசியல் தத்துவங்களைக் கொண்ட சங்கப் பிரதிநிதிகள் கூடி இருந்ததால், சில சமயம் அசலுக்கே ஆபத்து வருவது போலவும் இருந்தது. கம்பெனி நிர்வாக அதிகாரிகள் கூட, தத்தம் அறைக் கதவுகளில் கர்ப்பிணிப் பெண்கள் போல், மல்லாந்து சாய்ந்தபடியே, வெளியே எட்டிப் பார்த்தார்கள். காவல்துறைக்கு டெலிபோன் செய்வதற்கு, ஒரு 'ஹாட்லைன் தயாராக வைப்பப் பட்டிருந்து.

தொழிலாளர் சங்கங்கள் கொடுத்த வேலை நிறுத்த நோட்டீஸ் நேற்றே காலாவாதியானது. மொத்தம் பதினைந்து பிரதிநிதிகள். அவர்களுக்கு தலைவர்போல் விளங்கிய மெஜாரிட்டி யூனியன் தலைவர் கந்தனுக்கு, ஐம்பது வயதிருக்கலாம். அவர் கலந்து கொண்ட தொழிலாளர் போராட்டங்களை கணக்கெடுக்க முடியாததுபோல், கிரீடமாய் படர்ந்த தலைமுடிக்காரார்.

அப்பப்போ ஆள்காட்டித்தனம் செய்தும், தொழிலாளர் ஆற்றில் ஒரு காலும், நிர்வாக யந்திரச் சேற்றில் இன்னொரு காலையும்வைத்திருக்கும் ஒரு பிரதிநிதி, தன் கருத்தைச் சொன்னார்:

"நேற்றைய பேச்சுல, நிர்வாகம்,குறைந்த பட்ச போனஸும் எக்ஸ்கிராஷியா தொகையும் கொடுக்க சம்மதிச்சுட்டு, இதுக்கு மேல என்ன வேணும்? இரண்டையும் சேர்த்தால், நாம் கேட்கிற தொகை வரும்"

கந்தன் குறுக்கிட்டார்:

"அப்போ, போனஸ் என்கிற பேரால் மொத்தமாய் கொடுக்காமல் ஏன் பிரித்துக் கொடுக்கணும்? ஏன்னா, குறைந்தபட்ச போனஸுக்கு மேல கொடுக்கப்படுவது கருணைத்தொகைன்னு ஒரு முன் மாதிரியை உருவாக்க நினைக்காங்க. நாம் உழைப்புக்கு மரியாதை கேட்கிறோம். கருணையல்ல."

"அவங்கதான் இறங்கி வாறாங்களே."

"இறங்கி வர்ல; இறங்குறது மாதிரி ஏறி வாராங்க. அப்படியே அவங்க இறங்கி வந்தாலும், அது, மலைப்பாம்பு கீழே தெரியுற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/249&oldid=558856" இலிருந்து மீள்விக்கப்பட்டது