பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 238

மானைப் பிடிக்க, மரத்துல இருந்து இறங்குறது மாதிரி. அடுத்த வருஷம் நம்மை அடிக்கிறதுக்கு, இந்த வருஷம் ஒத்திகை பார்க்காங்க" - எதிர் வழக்காடியவர், கந்தனுக்கு எப்படிப் பதிலளிக்காலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவர் வாய் அனிச்சையாக “யாரது கால நேரம் தெரியாமல் என்று கத்தியது. "யோவ் யோவ் என்று நான்கைந்துபேர் பிடித்திழுக்க, முண்டியடித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்த கந்தன் "அவரை விடுங்க, உள்ளே வரட்டும்." என்றார். முண்டியடித்தவர், தமது சொந்த வீட்டுக்குள் வருவதுபோல் வந்தபோது அவர் பின்னால் நின்ற கோஷ்டி, தயங்கித் தயங்கி, வெளியே நிற்க முடியாமலும், உள்ளே நுழைய முடியாமலும் அல்லாடிக் கொண்டிருந்தது. கந்தன், அருகே நெருங்கியவரிடம், அன்புடன் கேட்டார்.

"என்ன விஷயங்க? நீங்க யாருங்க?"

"என் பேர் பெருமாள்சாமிங்க. வடசென்னையில் இருக்குதே அதோட பழைய காலேஜ் பிரின்ஸ்பாலுங்க. ஏன் அங்கேயே நிற்கிறீங்க? இவங்கெல்லாம் நம்ம ஆளுங்கதானே. சும்மா உள்ளே வாங்க. இது வசந்திங்க, ஒங்க தொழிற்சாலையில் வேலை பார்க்கிற கன்னையாவோட டாட்டருங்க. அவங்க மிஸ்ஸஸ். கன்னையாங்க. இது என் டாட்டர் மேகலா. அது என் ஸ்டுடண்ட் முத்தையா. இது டீச்சர்ஸ் லீடர் குருநாதன்."

"என்னங்க விஷயம்? ஒரு முக்கியமான விஷயமாய் பேசிட்டு இருக்கோம்."

"எனக்கு தெரியுங்க. வெளில சொன்னாங்க. பட், கன்னையா பிரச்சயிைல, நாங்க லேட் செய்யுற ஒவ்வொரு நிமிடமும், எம நிமிஷங்க. அதனாலதான் ஆபத்துக்குத் தோசமில்லன்னு வந்துட்டோம். கன்னையாவை ஒங்களுக்குத் தெரியுமா?

"நல்லா கேட்டீங்க? இந்த பாக்டரில அவர் சேரும்போது, அவருக்கு எல்லா உதவியும் செய்து கொடுத்ததே நான்தாங்க. கன்னையாவை இந்தத் தடவையாவது எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கச் சொல்லுங்க. ஆமா. கன்னையாவ எங்கே?

"அதைக் கேட்கத்தாங்க வந்தோம். என் சம்பந்தப்பட்ட வழக்குல, இந்த வசந்தியை, கோர்ட்ல பொய் சாட்சி சொல்லும்படி, காலேஜ் நிர்வாகமும், வாடிக்கை பத்திரிகையும், இவங்க ஏஜெண்டாய் போலீஸும் வற்புறுத்தி இருக்காங்க. ஒங்க ஜி.எம்.மும், அவரை பலதடவை மிரட்டியிருக்காரு. நேற்றையிலிருந்து, ஆளைக் காணல. போலீஸ் பிடிச்சுட்டுப் போனதாய் ஒரு ருமர். போய்க் கேட்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/250&oldid=558857" இலிருந்து மீள்விக்கப்பட்டது