பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 * சத்திய ஆவேசம்

இல்லங்கறான். போலீஸ் கன்ட்ரோல் ரும் போனோம். கடைசியாய் ஒரு டாக்சியை எடுத்துட்டு காஞ்சிபுரம் போயிட்டு வாறோம். ஒருவேளை பேக்டரியில இருப்பாரோன்னு பார்க்க வந்தோம். நேற்று ஈவினிங்லேயே போனவர், வீட்டுக்குத் திரும்பல."

ஒரு பிரதிநிதி பதிலளித்தார். "நேற்று. கன்னையா. பேக்டரியை விட்டுப் போகும்போது நான் பார்த்தேங்க. ஒர்க்ஸ் மானேஜர் எதையோ கொடுத்ததை வாங்கிக்கிட்டாரு. ஒரு மாதத்திற்கு முன்னால ஜி.எம். ருமுக்குப் போனத பார்த்தேன். அதுக்கு பிறகு, டல்லாத்தான் இருக்கார்."

வசந்தி, கந்தனை, நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள். சாயப்போனவளுக்கு மேகலா முட்டுக் கொடுத்தபோது, வசந்தி, கேவிக் கேவி அழுதபடியே சொன்னாள்:

"எங்கப்பாவை நீங்கதான் கண்டுபிடிச்சுக் கொடுக்கணுங்கய்யா. எல்லோருமாய் சேர்ந்து சதிசெய்து எங்கப்பாவை தீர்த்துக் கட்டி இருப்பாங்களோன்னு பயமாய் இருக்குதுங்க அய்யா. ஒங்க ஜி.எம்.கூட அப்பாவை அடிக்கடி மிரட்டியிருக்கார். நீங்கதாய்யா எப்படியும் எங்கப்பாவை மீட்டிக் கொடுக்கணும்."

"என்ன இது? அநியாயமாய் இருக்கே கன்னையாவை ஜி.எம். மிரட்டியிருக்கார். இந்த கன்னையா ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லி இருக்கப்படாதா? என் கிட்டே கூட வேண்டாம், தொழிலாளர்கள்ல ஒருத்தர்கிட்டே சொன்னாக்கூடப் போதுமே விஷயம். என் கிட்டே வந்திருக்குமாம். இப்போ.தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிறது மாதிரி ஆகிட்டு பாரு"

ஒரு இராப்பொழுதுக்குள் யுகக்கணக்கில் தீர்ந்து போனவள் போல் காணப்பட்ட கன்னையாவில் மனைவி. கோவிந்தம்மா, தள்ளாடித் தள்ளாடி, முன்னால் வந்தாள். மேகலா, வசந்தியை விட்டு விட்டு அவளை, அரவணைப்பாய் பிடித்தபடியே பேசவிட்டாள். மேகலாவிடம், உடம்மை கிடத்தியபடியே, வாயில் மட்டுமே உயிர் வைத்திருப்பவள் போல் துடிதுடித்துப் பேசினாள்:

"நான் பாவி, சொன்னேங்கய்யா ஆயிரம் நடந்திருந்தாலும, தொழிலாளிங்க தொழிலாளிங்கதான். தோழங்க தோழங்கதான். போலீஸ் மிரட்டுறதையும், ஜி.எம். மிரட்டுறதையும், ஒங்க ஆட்கள் கிட்டே சொல்லுங்க, சொல்லுங்கன்னு படிச்சுப் படிச்சு, பல தடவை சொல்லியிருக்கேன். ஆனால். என் மவராசா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/251&oldid=558858" இலிருந்து மீள்விக்கப்பட்டது