பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 240

"அழாதிங்கம்மா. ஒங்களைப் பார்த்துட்டு எல்லாரும் அழறாங்க பாருங்க. இப்போதான் தைரியமாய் இருக்கணும். உம். சொல்லுங்க. கன்னையா. அதுக்கு என்ன சொன்னார்?"

"அதுக்கு என் மவராசா. நான். தொழிலாளர் தோழர்களைக் காட்டிக் கொடுக்கிற துரோகியாய் இதுவரை நடந்து கிட்டேன். எந்த முகத்தோட அவங்ககிட்டே சொல்லுவேன்? கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்க வேண்டியதுதான். ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வரும. அப்போ என் தோழர்களோடு தோளுக்குத் தோளாய் நின்னு. புதுக் கன்னையாவான பிறகுதான், அவங்ககிட்டே முறையிடப் போறேன்னு சொன்னாரே... இப்போ முறையிட முடியாத இடத்துக்குப் போயிட்டாரோ. என்னவோ. தெரியலியே. ஒரே மாயமாய் இருக்கே. மர்மமாய் போயிட்டே."

"அடப் பாவி அவரு. ஆயிரந்தான். எங்களை விட்டு தனியாய் செயல்பட்டாலும். நாங்க அவரை விடுவோமோ?

பேராசிரியர். பெருமாள்சாமி "அவரு கருங்காலியாய். என்று இழுத்தபோது, கந்தன், அவரை மேற்கொண்டு பேச விடாது, வெட்டொன்று துண்டிரண்டாய் பேசினார்:

"பழைய கணக்கைப் பார்த்து, பழி வாங்குற வர்க்கம் வேற வர்க்கம். தொழிலாளர் வர்க்கம் இல்ல ஸார். ஆயிரம் நடந்தாலும், செய்தாலும், கன்னையா ஒரு தொழிலாளி. எங்க தோழன். அவரை யார் மிரட்டினாலும், அது எங்களை மிரட்டுறது மாதிரி. ஏம்பா, அருணாசலம்: ஜி.எம்.மைப் பார்த்துட்டு வரும்போதெல்லாம், கன்னையா டல்லாய் இருந்ததாய் இப்போ சொல்றியே, நீயாவது அப்போ என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே. சரி. சரி, எல்லோரும் எழுந்திருங்க. இந்த ஜி.எம்.மையே போய் நேராய் கேட்போம். உம். சீக்கிரம். அவங்க சொன்னது மாதிரி, கன்னையாவை கண்டுபிடிக்கத் தாமதமாகிற ஒவ்வொரு நிமிடமும், ஒரு எம நிமிடம். ஏய்யா, நாற்காலியில இருந்து துண்டை எடுக்க இவ்வளவு நேரமா?

கந்தன் முன் நடக்க, எல்லோரும் அவர் பின்னால் நடந்தார்கள். கட்டிடத்திற்கு வெளியே வந்தவர்களை, தொழிலாளர்கள் மொய்த்துக் கொண்டார்கள். கந்தன், அவர்களிடம் கன்னையாவைப் பற்றிப் பேசப் போனார். இதற்குள் ஒரு ஆட்டோ ரிக்ஷா உள்ளே வந்தது. கண்ணனும், மல்லிகாவும் இறங்கினார்கள். கந்தன், கண்ணனைப் பார்த்து, வணக்கம் போடக்கூட மற்தநவராய் "வாங்க தோழரே. என்ன திடீர்னு?" என்றார்.

கண்ணன், கந்தனை அர்த்த புஷ்டியாகப் பார்த்தபோது, தன் கையை பிடித்தவரைப் பார்த்து, ஆச்சரியப்பட்டார். கண்ணாவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/252&oldid=558859" இலிருந்து மீள்விக்கப்பட்டது