பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 242

அம்மா, மயக்கமுற்றுக் கிடப்பதையும் அறியாமல் வசந்தி, அவளைத் தரையில் உடம்பு முழுவதும் உராயும் படி இழுத்தாள். இதுவரை சோகத்தை சுமக்க முடியாமல் முகம் புதைத்து நின்ற மேகலா, அம்மாவையும் மகளையும் பிரித்துவிட்டாள். பிறகு கீழே உட்கார்ந்து, கன்னையாவின் மனைவியை தன் மடியில் போட்டுக் கொண்டாள். மல்லிகா. வசந்தியை வந்து பிடித்தாள். பிடித்தவள் யாரென்று தெரியாமலே, பிடிபட்டவள், மல்லிகாவின் தோளில் புரண்டாள். அப்பா அப்பா. என்று அழுது புரண்டாள். இதற்குள் மேகலாவின் மடியில் கையூன்றி எழுந்த தாய்க்காரி, புலம்பச் சக்தியின்றி, சிந்திக்கத் திராணியில்லாமல், நடந்தததை நம்ப மறுத்து, நடப்பதை அறிய முடியாத மரத்துப்போன உணர்வோடு, அங்கு மிங்குமாய் ஆடி, பேராசிரியர் தோளில் விழுந்தாள். முத்தையாவின் மார்பில் சாந்து, குருநாதனின் தலையில் தலை போட்டு, கந்தனின் தோளில் கைபோட்டு சடலம்போல் கிடந்தாள். பேராசிரியர் கண்களைத் துடைத்தபோது, வசந்தி, அந்த பேக்ட்ரியே அலறுவது போல் வீரிட்டாள்.

‘எப்பா.... என் அப்பா.... ஒங்களை போலீஸ் பாவிங்க எப்படில்லாம் அடிச்சுக் கொன்னாங்களோ? நீங்க எப்படில்லாம் தவிச்சிங்களோ? எப்படில்லாம் துடிச்சிங்களோ? பாவிங்க, நம்ம குடும்பத்தையே சிதைச்சுட்டாங்களே. அய்யாமாரே! எங்கப்பா இருக்கிற இடத்துக்கு எங்களை கூட்டிட்டுப் போங்கய்யா. ஒரு தடவை அவரைப் பார்த்துட்டு, நாங்க உடனே சாகனும். கூட்டிட்டுப் போங்க சாமி, கூட்டிட்டுப் போங்க. '

சுற்றி நின்ற தொழிலாளர்கள், கண்ணிர் விட்டார்கள். பிறகு ஆவேசக்காரர்களாய், சிதறிய விரல்களை முஷ்டிகளாக்கினார்கள். இதற்குள் ஒரு செக்யூரிட்டி கார்ட் ஒடி வந்து, கந்தனின் கால்களில் தலைவிழும்படி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து புலம்பினார்,

"கன்னையாவின் மரணத்துக்கு நானும் ஒரு காரணமா ஆயிட்டேங்க கன்னையா ரகசியமான ஒரு பொருளை, நிர்வாகத்தின் சம்மதத்தோடு கொண்டு போனார். அவரை சோதனை போட்டு, அந்தப் பொருளை விளம்பரப்படுத்திடாதேன்னு ஒர்க்ஸ் மானேஜர் சொன்னதை நம்பிட்டேன். நானும், கம்பெனிச் சதிக்கும், கன்னையா கொலைக்கும் ஒரு காரணமா ஆயிட்டேங்கய்யா. ஒங்க கையாலேயே என்னை வெட்டிப் போடுங்கய்யா.

தொழிலாளர்கள் கொதித்தார்கள்.

“புறப்படுங்க தோழர்களே! நம் தோழர் கன்னையாவின் சாவுக்குக் காரணமான ஜெனரல் மானேஜரையும். ஒர்கிங் மானேஜரையும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/254&oldid=558861" இலிருந்து மீள்விக்கப்பட்டது