பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 * சத்திய ஆவேசம்

கந்தனும், கண்ணனும், தொழிலாளர்களை கையாமார்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது, மானேஜிங் டைரக்டர் ஓடிவந்தார். பிறகு, படபடப்பாகப் பேசினார் :

"ஐ அம் ஸாரி, மிஸ்டர் கந்தன் நடந்ததைக் கேள்விப்பட்டேன். நிர்வாகத்துக்கும், இதுக்கும் சம்பந்தமில்ல. ஜி. எம்மையும், ஒர்கஸ் மானேஜரையும் இதோ சஸ்பென்ட் செய்யப் போறேன். அது மட்டுமல்ல, பேக்டரி தொழிலாளியை படாதபாடு படுத்துனதுக்காக."

"படாத பாடல்ல. கொலை."

"ஆல்ரைட். கொலை செய்யுறதுல உடந்தையாய் இருந்ததுக்கு, இவங்க ரெண்டு பேருக்கும் எதிராய் கம்பெனி சார்பிலேயே போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கப் போறேன்."

இதற்குள் ஒரு தொழிலாளி எங்கிருந்தோ ஒடி வந்தார். கந்தனிடம், குய்யோ முறையோ எனக் கத்தினார்.

"ஜி. எம்மும், ஒர்க்ஸ் மானேஜரும், அஞ்சு நிமிடத்துக்கு முன்னாடி, கார்ல ஏறி தப்பிட்டாங்க. தோழரே எம்.டி., இங்கே வந்து பசப்புறார். இதுல நாம் ஏமாந்துடப்படாது. வாருங்க தோழர்களே ! நம் கன்னையா தரை மட்டமாகத் காரணமான இந்த பேக்டரியை இடித்து நொறுக்குவோம்."

தொழிலாளர்கள் தினவெடுத்து நின்றபோது, கந்தன், அவர்களிடம் கெஞ்சாக் குறையாய்ப் பேசினார்:

"இந்த இருபதாம் நூற்றாண்டில், இவங்ககிட்டே இருக்கிற இந்த பேக்டரி, இருபத்தொன்றாம் நூற்றாண்டுல நம் கைக்கு வரப்போகுது. நம் பேக்டரியை, நாம் உடைக்கிறதுல அர்த்தமில்ல. அதோடு, நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும் வரை, நம்மை யாரும் ஏமாற்ற முடியாது."

எம்.டி. அம்மையப்பன் கெஞ்சினார். மல்டி நேஷனல்களோடு லிங்க் வரும் இந்தச் சமாயத்தில் எதுவும் குறுக்குப் பூனையாகி விடக்கூடாதே என்று அஞ்சினார். மிஞ்ச முடியாத தொழிலாளர் தலைவர்களிடம் மன்றாடினார் :

"ஒங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லன்னா, என்ருமுக்கு வாங்க. ஒங்க முன்னாடியே, சஸ்பென்ட் ஆர்டரை இஷ்ஷை செய்யுறேன். டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸிற்கு போன் செய்யுறேன். நடந்தது மன்னிக்க முடியாத குற்றம் ஜி.எம்., ஒரு பேஸ்டர்டாய் நடந்துட்டான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/255&oldid=558862" இலிருந்து மீள்விக்கப்பட்டது