பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 * சத்திய ஆவேசம்

பதிலாக, பேராசிரியர் பெருமாள்சாமி, கந்தனையும் கண்ணனையும் ஏற்றிக்கொண்டார்.

எப்படிப் போவது என்பதுபோல் யோசித்தபடி நின்ற மேகலாவையும், முத்தையாவையும், மல்லிகா, தான் வந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டாள். கூடவே, குருநாதன்.

எஞ்சிய தொழிலாளர் பெருங்கூட்டம், கண்கள் இரும்புக் கட்டிகளாக, கரங்கள், எதையோ பற்றப் போகும் கிரேன்கள் போல் துடிக்க, கால்கள் ராட்சத உருளைகளாகச் சுழல, வாய்கள், போலீஸ் தான்தோன்றித் தனம்- ஒழிக, ஒழிக" என்று முழக்கமாக, கோபக் குறியுமாய், குத்தீட்டி வீச்சுமாய், பஸ் நிலையத்தை நோக்கிப்

பாய்ந்தார்கள்.

அந்தக் காவல் நிலையத்தின் மீது மக்கள் வெள்ளம், அலை அலையாய்ப் பாய்ந்து கொண்டிருந்தது. அது காவல் நிலையல்ல, கொலை நிலையம் என்று நம்ப வைத்ததை நிருபிக்கப் போவதுபோல், போலீஸ் லத்திக் கம்புகள் சிலம்பாடிக் கொண்டிருந்தன. மக்களில் சிலர், ஆங்காங்கே அடிபட்டு விழுந்து, சிவப்புத் தலையோடு எழுந்து கொண்டிருந்தார்கள், போலீஸ் தடிகளுக்கு, கற்கள் பதிலளித்துக் கொண்டிருந்தன. கடுமையாகக் காயம் பட்டவர்களைச் சுற்றி கூட்டம் கூட்டமாக நின்ற மக்கள். அவர்களின் தலையிலும், முகத்திலும், தோளிலும் ஊற்றுப் போல் கிளம்பிய ரத்தவாடையில் ஆவேசமாகி, கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு, ஆவேசிகளானார்கள். போலீஸ்காரர்கள் துப்பாக்கிகளைக் குறியாக்கிய போதெல்லாம், கடலலை பின்வாங்குவது போல், லேசாய் பின்வாங்கிய மக்கள் கூட்டம், அடுத்த கணத்திலேயே, புயல் காற்று கடலலை போல் முன்னே முன்னே, முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.

எழுந்தவர்கள் விழுவதும், விழுந்தவர்கள் எழுவதுமாய், சிதறிச் சிதறி பெரிதாகிக் கொண்டிருந்த பெருங் கூட்டம், அடிக்க வந்த லத்திக் கம்புகளை தட்டிப் பறித்து, அவற்றையே தங்களின் ஆயுதங்களாக்கி வசமாக மாட்டிக் கெண்ட போலீஸ்காரர் தலையில் விழப்போகும் தடியடியை, கைகளால் தாங்கி, அடிக்கப் போனவர்களை அடக்கி, அடிபடப் போனவரை உயிர் பிழைக்க வைத்தவர்கள். தலை கக்கும் ரத்தத்தை எண்ணெய் தேய்ப்பது போல் தேய்த்தபடி, கண்களில் சினம் கக்க, துப்பாக்கிகளை நீட்டிக் கொண்டிருந்தவர்களை நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/257&oldid=558864" இலிருந்து மீள்விக்கப்பட்டது