பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 * சத்திய ஆவேசம்

போலீஸ்காரர்களை ஜன்னல் வழியாகக் காறி உமிழ்ந்தார்கள். பெண்கள், மண்வாரி இறைத்தார்கள். கூட்டத்தைக் கலைப்பதற்கு ஆரம்பத்தில் சூரத்தனம் காட்டிய காலவர்கள், தங்களின் லத்தி வீச்சுக்களையும், துப்பாக்கிப் பயமுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல், மக்கள் காவல் நிலையத்தை மொய்த்துக் கொண்டதும், தளர்ந்து போனார்கள்.

காவல் நியைத்திற்குள் பதுங்கிக் கிடந்த திம்மையா ஒயர்லஸ்ஸில் மேலிடித்திற்கு எதையோ உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார். துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பெர்மிஷன் கேட்டுக் கொண்டிருந்தார். சட்டசபைக் கூட்டம் நடப்பதால், ஒன்றும் செய்வதற்கில்லை என்றும், கூட்டத்தை விட்டுப் பிடிக்கும்படியும், அதே சமயத்தில், ஆயுதத்தில் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் அவருக்கு அறிவுரை வந்ததோ என்னவோ, ஆசாமி மேஜையில் குப்புறப் படுத்துக் கொண்டார்.

இதற்குள், கூட்டம் காவல் நிலையக் கதவை உடைக்கப் போனது. அவங்களை வெளியே தூக்கிட்டு வாங்கய்யா. என்ற ஆலோசனைக் குரலை, ஆணைக் குரலாக்க நினைத்து, செயல்படப் போனபோது, கண்ணனும், கந்தனும் ஒடி வந்தார்கள். கூட்டத்தை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார்கள். கீழே இறங்கும்படி சைகை செய்தார்கள். கூட்டத்துள் அவர்களை அடையாளம் கண்ட ஒரு சிலர், தத்தம்மைச் சுற்றி நின்றவர்களை உரிமையோடு, பின்னுக்குத் தள்ளினார்கள். வெளியேயும் கண்ணனின் யூனிட் ஆட்கள் கேந்திரமான இடங்களில் நின்றபடி, கொதித்த கூட்டத்தை, ஒரளவு கட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தார்கள், மக்கள் விட்டு விட்டு வெடிக்கும் வெடி மருந்தாய், ஆற்றுச் சுழிபோல, கும்பல் கும்பலாய், திட்டுத் திட்டாய் முண்டியடித்தார்கள்.

கீழே நின்ற கூட்ட மத்தியில், பேராசிரியர். பெருமாள்சாமி, ஒரு மரத்தோடு மரமாக சாய்ந்தபடி நின்றார். முத்தையா உட்பட பலத்த மாணவர் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டிருந்தது. தமழிாசிரியர் மாணிக்கம், போராசிரியர் பெயரில் கள்ளக் கணக்கு திறந்த அக்கெளன்டன்ட் ராமமூர்த்தி, நடிகை மல்லிகா ஆகியவர்கள் அவர், தங்களை மன்னித்துவிட்டதாய், கண்கள் மூலமாவது குறிப்புணர்த்த வேண்டும் என்பதுபோல், பேராசிரியரின் பார்வை தரிசனத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள். மேகலா, முத்தையாவின் குடும்பத்தினருடன் கோபக்குறியோடு, அங்குமிங்குமாய்ச் சுற்றிக்கொண்டிருந்தாள். இதற்குள் பின்பக்கமாய் பெருகிய கூட்டம், முன் பக்கமாய் நின்றவர்களை நெருக்கி, மேலும் முன்புறமாய் தள்ளியது. இதைக் கண்டதும், கூட்டம் வன்முறையில் ஈடுபடப் போகிறதோ என்று அச்சப்பட்ட கண்ணன், கந்தனிடம் ஏதோ சொல்ல, அவர், மெகாபோனில் பேசினார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/259&oldid=558866" இலிருந்து மீள்விக்கப்பட்டது