பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் - 14

அவள் போவது வரைக்கும் பல்லைக் கடித்த பிரபு, இப்போது கத்தினான்.

"முத்து என்னை அவள் முன்னால் நீ அப்படி இன்ஸ்ல்ட் பண்ணியிருக்கக் கூடாது."

"ஒன்னை இன்ஸ்ல்ட் பண்ணப்படாதுன்னுதான், நானே மன்னிப்புக் கேட்டு என்னையே இன்ஸல்ட் பண்ணிக்கிட்டேன். நீ ஒருத்தன் பேசுன பேச்சுக்காக, இவங்க சார்பிலயும் மன்னிப்புக் கேட்டு, இவங்களையும் இன்ஸ்ல்ட் பண்ணிட்டேன். நமக்கும் அக்கா தங்கை இருக்காங்க.."

"ஒனக்கும் எனக்கும் தேர்தலுல போட்டி இருந்திருக்கலாம். ஆயிரம் ஆயிரம் தகராறு நடந்திருக்கலாம். அதுக்காக, இப்படி நீ சமயம் பார்த்து கழுத்தை அறுக்கப்படாது. திஸ் இஸ் வெரி பேட்." "என்ன பிரபு. குழந்தை மாதிரி பேசுறே? ஏதோ பெரிய பார்லிமென்ட் தேர்தலுல நாம் மோதினது மாதிரி பேசுறியே. நான் அப்டில்லாம் நினைக்கல. நீ பேசுனது கிரிமினல் குற்றம். இந்த மாதிரி ஆபாசப் பேச்சை அனுமதிக்க முடியாது."

"ஒன் லீடர்ஷிப்பை நான் பறிச்சிடுவேனோன்னு பயப்படுறே.

"பயப்படல. நீ பறிச்சாலும், இன்னொரு வகையில் எனக்கு நிம்மதி."

"எப்படியோ பேசக் கத்துக்கிட்டே. இங்கே நடக்கிறதைப் பார்த்தால் போராட்டம் மாதிரித் தெரியல. ஏதோ சினிமா ஷல்ட்டிங் நடக்கிறது மாதிரி தெரியுது. டிரஸ்ட் போர்ட் மெம்பர்களை சரிக்கட்டி இருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது. போலீஸையும் சரிக்கட்டியிருந்தால் விவகாரம் விபரீதமாய் போயிருக்காது. வருமுன் காப்பதுதான் தலைமைக்குரிய லட்சணம். வந்தபின் போராடுறது அவலட்சணம்."

"எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் சரிபடுத்துறது தானே தவிர. சரிக்கட்டுறது அல்ல. பத்து நாளா நடக்கிற போராட்டத்துல இப்போதான் தலையைக் காட்டுறே. கல்லூரி முதல்வரே. சுயமாக செயல் படுவீர்னு எழுதியிருந்த கோஷத்தைக் கூட அழிச்சிட்டு தஞ்சாவூர் பொம்மையே, ஒனக்கு பதவி ஒரு கேடான்னு இதோ எழுதியிருக்கே. போராட்டத்தை அசிங்கப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது பிரபு. இது உயிர்ப் பிரச்சனை. நம்மோட டேலன்டை காட்டுற நாடக மேடையல்ல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/26&oldid=558629" இலிருந்து மீள்விக்கப்பட்டது