பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 248

"தோழர்களே தோழியர்களே! நாம் எப்போது தப்புச் செய்வோம், உடனே நம்மை வீழ்த்தலாம் என்று எதிரிகள் காத்துக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்தச் சமயத்தில் அமைதி காக்க வேண்டியது நமது கடமை. இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில், நம்மவர்கள் அவசரப் பிரேரணை கொண்டு வந்திருக்கிறார்கள். விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு பதிலளித்துத்தான் ஆகவேண்டும். அரசிடம் நமக்கு நீதி கிடைக்காமல் போனால், நமக்கு, நாமே நீதி வழங்கத் தெரியும். அரசு அதிகாரிகள் எங்களை அங்கே வரும்படி கூப்பிட்டிருக்கிறார்கள். நாங்கள், அவர்களை இங்கே வரும்படி சொல்லி இருக்கிறோம். அதுவரைக்கும் தயவு செய்து பொறுமை காக்கவும்."

கந்தன் பேசி முடித்ததும், ஒருவர் உரத்து முழங்க மழங்க கூட்டம் கோஷங்களை, பீரங்கிக் குண்டுகளாய் முழங்கின :

"கைது செய்: கைது செய்!”

கொலையாளிகளை கைது செய்!”

"டிஸ்மிஸ் செய் "டிஸ்மிஸ் செய்! "கல்லூரி நிர்வாகத்தை டிஸ்மிஸ் செய்!”

அடுக்கடுக்காய் நின்ற மக்கள் போட்ட கோஷங்கள், விண் முழங்க, மண்முழங்க, வீதியெங்கும் எதிரொலித்தன. வானத்தில் பயந்துபோய் வட்டமடித்த பறவைகள் கூட, அந்த கோஷங்களைக் கேட்பதற்காக, கீழே இறங்கிப் பறப்பதுபோலிருந்தது.

ஒரு மணி நேரத்திற்குள் ஒயர்லஸ் பொருத்தப்பட்ட ஜீப்புகள். ஏகப்பட்ட கறுப்புப் பண்ணாடிக் கார்கள், ஆயுதப் போலீஸ் படைகளைக் கொண்ட பெரிய பெரிய வேன்கள் குவிந்தன. அவை, வந்த போதும், நின்ற போதும் கூட்டத்தின் முழக்கங்கள் உஷ்ணப்பட்டன. போலீஸ் காவலுடன் வந்த அமைச்சர் ஒருவர், கந்தன் போன்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போலீஸார், துப்பாக்கி சகிதமாய் ஆங்காங்கே நிற்கப் போனார்கள். இதனால் ஆவேசப்பட்டு கூட்டம் பலப்பரீட்சைக்கு தன்னை ஆயத்தம் செய்யப் போனபோது, அமைச்சர், போலீஸ் மைக்கில் பேசப் போனார். கூட்டத்தினர், அவர் சொல்லப் போவதை, கேட்கப் போவதாகத் தெரியவில்லை. ஆட் கள் அங்குமிங்குமாக அலைமோதினார்கள். அமைச்சர் தர்ம சங்கட மாக விழித்துவிட்டு, கந்தனை தனியாய்க் கூப்பிட்டுப் பேசினார். பிறகு மைக்கை அவரிடம் நீட்டினார். கந்தனும் வெற்றி தோல்வி உணர்வில்லாத குரலில், அழுத்தமாகவும் அமைதியாகவும் பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/260&oldid=558867" இலிருந்து மீள்விக்கப்பட்டது