பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 250

ஒரு சில உறவினர்கள், குற்றுயிரும் கொலையுயிருமாய் ஆனவர்கள் போல், தாறுமாறாய் கிடந்தார்கள்.

திடீன்ெறு, காட்டாற்று வெள்ளம் போல், மக்கள், திபுதிபுவென்று ஒடி வந்தார்கள். கன்னையாவின் பிணத்தை பிணம் போலவே விறைத்துப் பார்த்தார்கள். காவல் நிலையத்தில் ஆவேசப்பட்டு, கண்களில் நெருப்பேந்திய பெண்கள், இப்போது வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். நடிகை மல்லிகா கீழே விழுந்து புரண்டாள். தொழிலாளர் தோழர்களும், கவ்லூரி மாணவர்களும், மற்றவர்களும் மலைத்து நின்றார்கள்.

கன்னையாவின் உடல் முழுவதும் அறுக்கப்பட்டதற்கும், உதைக்கப்பட்டதற்கும் அத்தாட்சியாக, வெள்ளை வெள்ளையான கட்டுக்கள்... தலையில் வெள்ளைக் கிரீடம், அதன்மேல், ரத்தப்பனிக்கட்டிகள். ஒல்லியான கன்னையா, உடம்பு முழுவதும் உப்பிக் கிடந்தார். எளிமையாய் உடையணியும் கன்னையாவின் உடம்பில், விதவிதமான துணிகள். அதுமட்டுமா? அவரைச் சாகடித்த போலீஸ் வர்க்கப் பிரதிநிதிகளே. இப்போது அவருக்குக் காவல். அதுவும் துப்பாக்கி சகிதமாய். உயிரோடு இருக்கும் பெரிய மனிதர்களுக்குக் கொடுப்பது போன்ற பாதுகாப்பு.

வசந்தியின் அன்னை கோவிந்தம்மா, கூட்டத்தைப் பார்த்ததும் உயிர்தெழுந்தவள் போல், அங்குமிங்குமாய் கண்களை உருட்டினாள். பிறகு, மகளைக் கட்டிப் பிடித்தபடியே என் ராசா. என். ராசா. என்று கத்தினாள். வசந்தி, அழவில்லை. அம்மாவின் இழுத்த இழுப்பிற்கேற்ப, அவள் உடலாடியது. உயிராடாதவள்போல், கால்களை சப்பாணியாக்கி, கரங்களை மார்பில் குறுக்கும் நெடுக்குமாய் போட்டபடி, எதையோ வாய்க்கள் ய முனங்கினாள். அப்பா-பிணத்தை ஏறிட்டு நோக்கிய வேகத்திலேயே, தலையைத் தொங்கப் போட்டபடி, அவ்ஸ் முனங்கிக் கோண்டே இருந்தாள். முகம் நிர்மலமாய் கிடக்க, உதடுகள் மட்டும், உள்முகமாய் எதையோ சொல்லிக் கொண்டிருந்தன.

பேராசிரியர் பெருமாள்சாமி, கூட்ட மத்தியில், கன்னையாவின் சடலத்தை நோக்கி நகர்ந்து, நகர்ந்து, ஊர்ந்து ஊர்ந்து வந்தார். முன்பின் பார்த்தறியாத கன்னையாவை, அப்போது, பிணக் கோலத்தில் பார்த்தபடியே நின்றார். உயிரை விலையாகக் கொடுத்து, குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றியதுடன், கல்லூரிப் போராட்ட வெற்றிக்குக் காரணமான அந்த சடலத்தை உற்றுப் பார்த்தார். அதன்மேல் போடப்பட்ட கட்டுக்கள், அவருக்கு, சத்திய வெட்டுக்காளாகத் தோன்றின. சத்தியம் சாகாது என்பது போல், கன்னையாவின் கண்கள் மட்டும் தீபக் களையோடு மின்னியது. யாரையோ, எதையோ தீர்த்துக்

கட்ட வேண்டும் என்பதுபோல், அந்தக் கண்கள் சொல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/262&oldid=558869" இலிருந்து மீள்விக்கப்பட்டது