பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 * சத்திய ஆவேசம்

சொல்லிக் கொண்டிருந்தன. பேராசிரியர் விம்மிப் புடைத்தார். கொடிக் கம்பத்திலேயே தன் தலையை மோதிக் கெண்டபடி

"கன்னையா. நான். நின்னு காட்டுனது பெரிசில்ல கன்னையா உண்மைக்காக உயிரை கொடுத்தீங்களே. அதுதான் பெரிசு கன்னையா, இப்படி நடக்குமுன்னு தெரிஞ்சிருந்தால், நான் எதையுமே நடத்தி இருக்கமாட்டேன் கன்னையா. உங்களை விலையாய் கொடுத்து, நான் எந்தப் பதவியையும் ஏத்துக்க மாட்டேன் கன்னையா?

மயங்கியதுபோல் காணப்பட்டு, கீழே விழப்போன பெருமாள் சாமியை மாணவர் கூட்டம் தாங்கிக் கொண்டது. கன்னையாவுடன் நெருங்கிப் பழகிய தொழிலாளி ஒருவர், கன்னையாவின் குடும்பத்தைப் பார்த்தார். பிறகு, சத்தியம்போல் ஒலித்தார் :

"காப்போம் : காப்போம் ! எங்கள் தோழனின் குடும்பத்தைக் காப்போம்!"

கண்களால் நீர் இறங்கி, அந்த நீராலேயே முகங்களை அலம்பிக் கொள்வது போல் அவ்வப்போது துடைத்துக் கொண்ட கூட்டம், குறிப்பாக தொழிலாளர் கூட்டம் முழக்கமிடடது :

"அயோக்கியன் அப்பாவுவை

கைது செய்! கைது செய் ! "

"தொழிற்சாலை அதிகாரிகளை --

கைது செய் கைது செய்!

"வாடிக்கை வீணர்களை

கைது செய் கைது செய்" வசந்தி அந்தக் கூட்டத்தைப் பார்த்தாள். பிறகு தந்தையை நோக்கினாள். தானாகப் புல்ம்பினாள் :

"ஒங்க வர்க்கம், ஒங்களுக்காக எப்படித் துடிக்கிறது என்கிறதைப் பாருங்கப்பா : ஒரு தடவையாவது, உயிர் திரும்பிப் பார்த்துட்டு, அப்புறம் வேணுமுன்னால் போங்கப்பா அப்பா அப்பா. ஒரு தடவையாவது. ஒரே தடவையாவது. ”

கன்னையா, ரதத்தில் நகர்ந்தார் ரதத்திற்கு முன்னாலும் பின்னாலும் கண்கொள்ளாக் கூட்டத்துடன், காது கொள்ளா ஒலத்துடன் பிரதான சாலையில் ஊர்வலம் போனது. மேகலா வசந்தியை அனைத்தபடியே, முத்தையாவின் காலுக்குக்கால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/263&oldid=558870" இலிருந்து மீள்விக்கப்பட்டது