பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 252

கரத்திற்குக் கரம் இணைய நடந்தாள். கன்னையாவின் மனைவியை மல்லிகா தாங்கியபடியே நடந்தாள், பின்னால், கண்ணன், கந்தன், தொழிலாளர் கூட்டம் நடைபோட்டது. பேராசிரியர் பெருமாள்சாமி, முத்தையாவின் அப்பாவையும், அம்மாவையும், சகோதரிகளையும் சோகமாய் பார்த்தபடியே, தள்ளாடித் தள்ளாடி நடந்தார். அப்போது, ஆசிரியர் சங்கத் தலைவர் குருநாதன், அவர் கையைப் பற்றி ஒரு ஒரமாக நடந்து, அவரையும் நடத்தியபடியே, காரில் கிசுகிசுத்தார்.

"காலேஜ் விவகாரத்தைப் பேசுறதுக்கு, பேச்சு நடத்த வரும்படி எஜூகேஷன் டிபார்ட்மென்டும், அமைச்சரும் அழைப்பு அனுப்பி இருக்காங்க. நீங்களும் எங்களோட வரணும்."

"இதைப் பேசுறதுக்கு இதுவாப்பா சமயம்?"

"மன்னிக்கணும். நீங்க கன்னையா சடலத்துக்கு முன்னால பேசுன வார்த்தை என்னை கேட்க வச்சுட்டு. ஒங்களுக்குப் பிரின்ஸ்பால் பதவி வேண்டாமுன்னால், இந்த காலேஜ் இருக்கிறதுல அர்த்தமமல்ல."

"என்னை விடுப்பா. நான் பட்டது போதும். சாகும் போது, சங்கரா சங்கரா என்கிறது மாதிரி, நான். ஒரு பிரின்ஸ்பிளுக்குத்தான் போராடினேன். பிரின்ஸ்பால் போஸ்ட்டுக்கு இல்ல."

“ஸார். நீங்க அப்படிச் சொல்லப்படாது. வெண்ணெய் திரளும் போது."

"கன்னையா என்கிற பானையை உடைச்சிட்டாங்களடா... பாவிப் பயலுவ..."

“ஸார். ஒங்களைவிட அதிகமுன்னு சொல்ல முடியாது போனாலும். ஒங்க அளவுக்கு, வசந்தியோட அப்பாவின் மரணத்தால், நானும் பாதிக்கப்பட்டிருக்கேன். ஆனால் நான் பிராக்டிக்கலா பார்க்கேன். நடந்ததை நம்மால மாற்ற முடியாது. இனிமேல் நடக்கப் போறதைப் பற்றித்தான் யோசிக்கணும். நீங்க பிரின்ஸ்பாலாய் இருக்க சம்மதிக்காட்டால், நாங்க, பேச்சு நடத்தவே போகமாட்டோம்."

பேராசிரியர், குருநாதனின் கையை பிடித்தபடி, நின்றார். பிறகு அவர் முகத்தையே சிறிதுநேரம் பார்த்துவிட்டு, பற்றற்றுப் பேசினார்.

"நான்... நான்... அதிக நாளைக்கு உயிரோட இருக்க மாட்டேம்பா-'

"ஸ்ார். ஸார்."

"ஆமாம்பா... பத்திரிகைக்காரனும்... வருமான வரி ரெய்டுகாரனும். கோர்ட்காரனும் எனக்குகால, தூத, எமனாய் வந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/264&oldid=558871" இலிருந்து மீள்விக்கப்பட்டது