பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 * சத்திய ஆவேசம்

என்னை எப்பவோ கொன்னுட்டாங்க. ஒரு வாரத்துக்கு முன்னாடி, தலை சுத்துதேன்னு டாக்டர்கிட்டே போனேன். எனக்கு. ஹைபர் டென்சனாம். வயிற்றுல அல்சராம். கிட்னில கோளாறாம். எந்தச் சமயத்துல இந்த கட்டை போகுமோ. இன்னும் மேகலாவுக்குக்கூட இது தெரியாது."

'ஏன் ஸார். அபசகுனமாய் பேசுறிங்க. வேளா வேளைக்கு மருந்து சாப்பிட்டால் உடம்புக்கு ஒன்றும் ஆகாது."

"ஆனால் மனதுக்கு? இந்தப் பதவிக்கு நான் வந்தால். ஒரு வாரத்துல எனக்கு. எமலோகப் பதவி நிசசயம் கிடைக்கும். நல்லதோ. கெட்டதோ. கன்னையாவை விலையாய்க் கொடுத்து, பதவியை வாங்கிக்க விரும்பல. பிரின்ஸ்பால் பதவியில் உட்காருறது, கன்னையா பிணத்து மேலே உட்காருறதுக்கு சமமுன்னு உள்ளுணர்வு சொல்லுது. இந்த ஒரு வருஷமாய் நான் பட்டயாடு, ஒரு தலைமுறைக்குப் போதும் அப்புறம் ஒன் இஷ்டம். பாவிப் பசங்க... என்னை கொன்னுட்டு, இந்த கன்னையாவை விட்டிருக்கப்படாதா? என் மகளுக்காவது முத்தையா இருக்கான். அவன் மகளுக்கு யாருமே இல்லையப்பா..."

"அப்படின்னா, ஒரு மாதமாவது. நீங்க இருந்தாகணும்." "சரிப்பா ஒனக்காக ஒரு மாத கூத்துக்கு மீசை எடுக்கத் தயார். ஆனாலும் ஒன்று. அரசாங்கம் காலேஜை. கேர்டேக்கராத்தான் எடுக்கான். எல்லாம் ஆறி அடங்குனதும். பழையபடியும் அப்பாவு கிட்டேயே காலேஜை கொடுக்க நினைக்கலாம். அதனால. கிடைத்த வெற்றி பெரிசில்ல. அதைக் கட்டிக் காக்கதுதான் பெரிசு. அதனால. நாம் விழிப்பாய் இருக்கணும்."

பேராசிரியர். பெருமாள்சாமி, குருநாதனை விட்டுவிட்டு, கன்னையாவின் ரதத்திற்குப் பின்னால் சென்ற மக்கள் சாகரத்தில் ஒரு துளியானார்.

ரதம், சற்று வேகமாக நகரத் துவங்கியது. அப்போது அருகே உள்ள ஒரு கடைமுன்னால தொங்கிய பத்திரிகை போஸ்டரில் -

"காவல் நிலையத்தில் தொழிலாளி சாவு

போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது பல பிரமுகர்கள் கைதாகலாம்!!

நீதி விசாரணைக்கு, அரசு உத்திரவு' அப்பாவி கல்லூரி முதல்வர் பெருமாள்சாமியை நீக்கி, அப்பாவி தொழிலாளியையும் கொன்றவர்கள் மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/265&oldid=558872" இலிருந்து மீள்விக்கப்பட்டது