பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 254

அரசு நடவடிக்கை. கல்லூரி மூடல்.

என்று கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. ஒருவர் ஒடிப்போய், ஒரு பத்திரிகைப் பிரதியை வாங்கி, நடந்தபடியே படித்தார். பிறகு, கண்ணனிடம் அதை நீட்டினார். கண்ணனும், கந்தனும் படிக்கும் வகையில், அதை விசாலமாக்கினார். இருவரின் தோள்களுக்கு அப்பால் தலையை விட்டுப் படித்த ஒருவர், அந்தச் செய்தியை விமர்சித்தார்: -

"இதெல்லாம் நாடகம். அந்தப் பசங்க கைதானாலும், அடுத்த நிமிஷத்துல ஜாமீன்ல வந்துடப் போறாங்க. அப்புறம் ஆறுன சோறு, பழைய சோறு கதைதான். நீதி விசாரணை என்கிறது, கஞ்சிலயும் பழைய கஞ்சி"

சொன்னவரைப் பார்க்காமலே, சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்ட கண்ணன், முன்னாலும் பின்னாலும் வியாபித்த மக்களைப் பார்த்தார். பக்கவாட்டில், கோபாவேசமாக நின்றவர்களைப் பார்த்தார். அத்தனை பேரும், சத்தியத் துண்டுகளாய், துடித்துக் கொண்டிருப் பதையும், கொதித்துப் போனதையும் கண்டார். பிறகு, எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லுவதுபோல், ரதத்தின் வேகத்திற்கு ஏற்ப முன்னெட்டு போட்டபடியே, சொன்னார் :

"நீங்க சொல்றது இப்போதைக்குத்தான் சரி. இந்த சமூக அமைப்புல நீதிமன்றங்கள் தர்மசபைகளாக முடியாது. அவங்க. ஜாமீன்ல வந்தால் வரட்டுமே இத்தனை. போக்கிரித்தனங்களுக்கும் காரணமான, இந்த சமூக அமைப்பே இப்போ ஜாமீன்லதானே இருக்குது'

ఖీ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/266&oldid=558873" இலிருந்து மீள்விக்கப்பட்டது