பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 16

"ஆசிரியர் நியமனத்தில் லஞ்சம் வாங்கும் டிரஸ்ட் போர்ட்”

"ஒழிக! ஒழிக"

"மாணவர்களை சித்ரவதை செய்யும் போலீஸ்"

toஒழிக."

"அடிமைப் பிரின்ஸ்பால்'

"ஒழிக. "தமிழக அரசே கல்லூரி நிர்வாகத்தை ஏற்றுக் கொள்:

ஒழிக! ஒழிக’

போலீஸ் அடக்குமுறை ஒழிக’

ஒழிக, ஒழிக’

கலைமகளை விலைமகளாக்கும் -

கல்லூரி டிரஸ்ட்

ஒழிக, ஒழிக’

எதிர்ப்புறச் சாலையில், கும்பலோடு கும்பலாக நின்ற அன்னம்மாள், தானும் கோஷம் போடலாமா என்பது போல் ஆவேசப்பட்டு நின்ற கணவனின் இடுப்பைப் பிராண்டியபடி ஏங்க. ஏன் இந்தப் பசங்க வாழ்கன்னு சொல்ல மாட்டேன்கறாங்க...' என்றாள். உடனே அவர், இவங்க சொல்றவங்கெல்லாம் ஒழிஞ்சால், அவங்க வாழ்வாங்கன்னு அர்த்தம் என்று வியாக்கியானம் செய்தார். 'இந்தப் பசங்களை எல்லாம் குருவியைச் சுடுறது மாதிரி சுட்டுத் தள்ளணும். நாட்ல வரவர...' என்று சொல்லிக் கொண்டு போன ஒரு வேடிக்கை வாசியை எதுக்காகத் தகராறு பண்றாங்கன்னு ஒனக்குத் தெரியுமாய்யா. விஷயம் தெரியாமல் பேசுறது விஷம் மாதிரிப்பா என்று அதட்டினார்.

இதற்குள், மாணவ முழக்கங்கள் வலுத்தன. காப்போம். காப்போம். போலீஸ் லாக்கப்பில் வாடும் எங்கள் சகோதரர்களைக் காப்போம் என்று மாணவர்கள் முழங்கியபோது, பல மாணவர்கள் உணர்ச்சி வசப்பட்டு, போலீஸ் நிலையம் இருந்த திசையை நோக்கிப் புறப்படப் போனார்கள். போலீஸார் அவர்களை வழிமறிப்பதுபோல், லத்திக் கம்புகளை குறுக்காக நீட்டினார்கள். அப்போது -

"லிவ் தெம். ஐ வில் டாக் டு மை பாய்ஸ்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/28&oldid=558631" இலிருந்து மீள்விக்கப்பட்டது