பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 * சத்திய ஆவேசம்

திடீரென்று தங்கள் முன்னால் தோன்றிய உருவத்தைப் பார்த்து, மாணவர்கள் திகைத்தார்கள்.

வந்தவர், கல்லூரி முதல்வர், பேராசிரியர் பெருமாள் சாமி.

பேராசிரியர். பெருமாள்சாமி, சரியான உயரந்தான் என்றாலும், வயிறு விம்மிப் புடைத்து, வெளியே வெடிக்காமலே அப்படியே விழப் போவது போல், துருத்திக் கொண்டு இருக்காமல், தொங்கிக் கொண்டிருந்ததால், அவரைப் பார்ப்பதற்கு குட்டை மாதிரியே தெரியும். டை கட்டாமலேயே, கோட் போட்டிருந்தார். அதன் பாக்கெட்டுகளில், விதவிதமான காகிதக் குவியல்கள். இடுப்பில் பட்டும் படாமலும் சுற்றியிருந்த பேண்டின் விளிம்பிற்கு மேலே, அன்டிராயரின் மேல்முனை எட்டிப் பார்த்தது, ஏதோ, அவர் ட்புள் நெட் பேன்ட் அணிந்திருப்பதாய்க் காட்டியது. தலையில் சுழித்த முடிபோல, முகமும் பல்வேறு ருபங்களாகச் சுழித்துக் காட்டியது. சிவப்பு முகத்தில் பூத்த பலாச்சுளைக் கண்கள்.

கல்லூரி முதல்வரின் முகத்தை மட்டுமே பார்த்த மாணவர்கள், பிறகு தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பத்து வினாடிகளுக்கு அப்புறம், முத்தையாவைப் பார்த்தார்கள். அவனோ, கல்லூரி முதல்வர் மேல் போட்ட கண்களை எடுக்காமலேயே நின்றான். அவர், என்ன சொல்லப் போகிறார் என்பதை அறியும் முக அறிகுறியோடு, சாய்வாகப் பார்த்தான்.

பேராசிரியர். பெருமாள்சாமி, அங்குமிங்குமாக நின்ற போலீஸ், கல்லூரி அறிவிப்புப் பலகை, பூதாகரமாய் நின்ற மாணவர்கள் முதலிய இத்யாதிகளை நோட்டமாகப் பார்த்தார். பின்னர் தஞ்சாவூர் பொம்மையே ஒனக்கு பதவி ஒரு கேடா என்ற வாசக கோஷத்தை, அசல் பொம்மை மாதிரியே தலையை ஆட்டியபடி பார்த்தார். பின்னர், லேசாகச் சிரித்தபடி, எனக்கு தஞ்சாவூர் இல்லே. திருச்சி என்றார்.

மாணவர்கள், சங்கடத்தோடு நெளிந்தார்கள். அதே சமயம், முன்புபோல் முகத்தைக் காட்டாமல் பின்னணி பாடும் அதே குரல், இப்போதும் தஞ்சாவூருக்கும் திருச்சிக்கும் அதிக தூரமில்லே. என்றது. மாணவர்கள், குரல் வந்த திக்கையே கோபமாகப் பார்த்த போது, அந்தப் பகுதியில் எல்லோரும் பால் குடிக்காத பூனைகள் மாதிரியே தெரிந்தார்கள். இக்கட்டான சமயத்தில் எக்காளமாகப் பேசியவனை தேடுவதுபோல் ஒரு சில மாணவர்கள், குரலுக்குரியோனை அங்குமிங்குமாகத் தேடியபோது, பேராசிரியர், வயிறு குலுங்கச் சிரித்தார். கீப் குயட் மை பாய்ஸ். இன்டலிஜெண்ட் ரோக்ஸ் ஆர் பெட்டர் தென் இன்னோஸெண்ட் பூல்ஸ்' என்றார். பிறகு, இந்தக் காலத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/29&oldid=558632" இலிருந்து மீள்விக்கப்பட்டது