பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 18

மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவோ அல்லது ஏசவோ தெரியாது என்ற தமது நீண்ட நாள் கருத்தை நினைவுபடுத்தி, சும்மா இருங்க... பேசுனவன் மேலே எனக்குக் கோபம் இல்ல. ஏன்னா புத்திசாலித்தனமான போக்கிரி, அப்பாவித்தனமான முட்டாள்களைவிட பெட்டர். என்று மொழி பெயர்த்து விட்டு போக்கிரின்னு சும்மா கலாட்டாக்காரன் என்கிற அர்த்தத்துலதாம்பா சொன்னேன். தப்பா நினைச்சுக்காதிங்கோ. எனக்கும் தெரியும். ஒங்க ஏச்செல்லாம் வெறும் பேப்பர் புல்லட்ஸ். என்றார்.

என்றாலும், கல்லூரி முதல்வர், தஞ்சாவூர் கோஷத்தையே, தன்னை மறந்த அல்லது நினைத்த லயத்தில் பார்த்துக் கொண்டே நின்றபோது, ஒரு மாணவன், அந்த கோஷம் தாங்கிய கரும்பலகையை அழிக்க, பைக்குள் கைவிட்டு கைக்குட்டையை தேடினான். அவசர அவசரமாகத் தேடியும், ஒரு வேளை அப்படி அவசர அவசரமாக தேடியதாலோ என்னவோ, அது கிடைக்க நேரமாகும் என்றும், அந்த நேரம் வரைக்கும் கூட அந்த கோஷம் தங்கியிருப்பதைப் பொறுக்காதவன்போல், சற்றுக் குனிந்து பளபளப்பான தன் டெர்லின் சட்டை முனையால், கோஷத்தைக் கொலை செய்தான். திடீரென்று முத்தையாவும்.ஒங்க மேல எங்களுக்குத் தனிப்பட்ட கோபம் கிடையாது ஸார். பிரின்ஸ்பால் பெருமாள்சாமியை பிடிக்கலதான். ஆனால் எகனாமிக்ஸ் புரொபஸர் பெருமாள்சாமியை நாங்க நினைத்தாலும் வெறுக்க முடியாது. என்றான்.

பேராசிரியருக்கு, அழுகை வரும் போலிருந்தது. அவருக்கே அதன் காரணம் புரியவில்லை. ஏதோ பேசப் போனார். அதற்குள் நெஞ்செல்லாம் அன்பென்னும் நீர் சுரந்து, குளம் போல் வியாபித்து, அது கண்ணிராய் கண் மதகுகளை ஊடுருவி, கசியத் துவங்கயது. முகத்தை வேறுபுறமாய் திருப்பிக்கொண்டு, கைக்குட்டையை எடுத்தார். பிறகு, ஈரக் கைக்குட்டையுடன் மீண்டும் திரும்பி, மாணவர்களையே பார்த்தபடி, "ஐ அம் ஸாரி. பார் ஆல் தீஸ். நானும் எகனாமிக்ஸ்ல மட்டுந்தான் மாஸ்டராய் இருந்துட்டேன். ஒங்க பிரச்சினைகளை மாஸ்டர் செய்து தீர்க்க மறந்துட்டேன். ஆல் ரைட். முத்தையா. நீயும் இன்னும் இரண்டு மூன்று பிரதிநிதிகளும் என் ருமுக்கு வாங்க.. பிரச்சினையைப் பேசித் தீர்த்துடலாம். லுக் போலீஸ்மேன். கம்மாவே நில்லுங்க" என்று கண்களை உருட்டியபடியே சொல்லிவிட்டு, கல்லூரிக்குள் நுழைந்தார்.

போலீஸ்காரர்கள், அவர் அடிக்கச் சொல்கிறாரா அல்லது பிடிக்கச் சொல்கிறாரா என்பது புரியாமல் விழித்தபோது, அதே அசரீரிக் குரல் அருபன், இப்போதும் தலையைக் காட்டாமல் "போலீஸ்காரங்க ஜாக்கிரதைங்கோ. பசங்க அடிச்சாலும், திருப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/30&oldid=558633" இலிருந்து மீள்விக்கப்பட்டது