பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 * சத்திய ஆவேசம்

அடிக்கக்கூடாதுங்கோ. நின்ன இடத்துலே நிக்கனுங்கோ... ஒங்களாலே அப்டி நிக்க முடியாதுங்கோ. பாவங்கோ. அதனால, ரோட்ல போய் வழக்கம்போல கார்க்கரனை விட்டுட்டு, மாமுலாய்' சைக்கிள்கரானை பிடியுங்கோ. அய்யய்யாே. தோ பாருங்கோ கெய்வி. தெரு ஒரத்தையே வீடாக்கி. ஆப்பம் சுட்டுக்கினு தேசத் துரோகம் பண்றாள். உடனே வாரிக்கினு போங்கோ. இல்லன்னா, நாட்டோட சுதந்திரம் பறிபோயிடுங்கோ..." என்று ஒலித்தான்.

மாணவர்களில் ஒரு கூட்டம் சிரித்தது. இன்னொரு கூட்டம் உதடுகளைக் கடித்தது. முத்தையா, சிறிது கோபப்பட்டு டோன்ட் பி எலில்லி. அவங்க டீட்டிய அவங்க செய்யுறாங்க. இதில் என்ன இளக்காரம்...?" என்றான். சொன்னவனைத் தேடுபவன்போல், கூட்டத்தைத் துழாவினான். பிறகு, மூன்று மாணவப் பிரதி நிதிகளைக் கூட்டிக்கெண்டு, கல்லூரிக்குள் நுழைந்தவன், மாணவர்களைப் பார்த்துத் திரும்பி, "நாம் எல்லோரும் போக முடியாது என்பதால், நாங்க நாலு பேரும் போறோம். நம்மில் ஒருவன்மீது ஒரு துரும்பு விழுந்திருந்தாலும், அது எடுக்கப் படுவதற்கு முன்பு, நாங்க எந்த சமாதானத்திற்கும் இணங்க மாட்டோம் என்றான். உடனே, மாணவர்கள் கைதட்டினார்கள். ஒரு பையன் வாய் தவறி, அடிமைப் பிரின்ஸ்பால் என்று உரக்கக் கத்தி, மறுபாதி கோஷத்தை மற்றவர்கள் சொல்லக் காத்திருப்பவன்போல், வாயை மூடாமல் நின்றான். மாணவ கூட்டமும் வாழ்க என்றது.

முத்தையாவும், அவன் தோழர்களும், கல்லூரி கேம்பஸ்ஸிற்குள் பாதி வழி வந்தபோது, எதிர்த்திசையில் இருந்து, கல்லூரி முதல்வரின் மகள் மேகலா, திரும்பிக் கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்ததும், வேகமாக நடந்து, அவர்களை வழி மறிப்பதுபோல் நின்றுகொண்டு, முதல்வரின் அறையை மாறி மாறிப் பார்த்தபடியே, "அப்பா ஒங்ககிட்டே காம்ப்ரமைஸ0க்கு வந்தது டிரஸ்ட் போர்ட் சேர்மனுக்குத் தெரியாது. 'நீங்க எப்படி பேசலாமுன்னு. இப்போ அவரும், இரண்டும் மெம்பர்களும் அப்பாகிட்டே, ஸாரி. பிரின்ஸ்பால்கிட்டே, சண்டை போடுறாங்க பயங்கரமான ஆர்குமென்ட் நடக்குது. அந்தப் பக்கமாய் ஒட்டுக் கேட்ட நான், ஆத்திரத்துல உள்ளே போய் எதுவும் பேசிடப் படாதேன்னு, வெளியே போறேன். பக்குவமாய் பார்த்து டேக்கிள் பண்ணுங்க.." என்றாள்.

முத்தையா, அவளை நன்றியோடு பார்த்தான். திடீரென்று புருவத்தைச் சுழித்துபின் பிரச்சினை தீர்ந்து போச்சுன்னு நினைச்சால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/31&oldid=558634" இலிருந்து மீள்விக்கப்பட்டது