பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 20

டிரஸ்ட் பூசாரிகள் குறுக்கே நிற்காங்களா. பார்த்துடலாம். என்று மாணவர்களுக்கு சொல்வதுபோல், அவளுக்குச் சொன்னார்.

மேகலா, மாணவப் பிரதிநிதிகளைப் பார்த்தபடியே பராக்காக நடந்தாள். அப்பாவை விட்டு விட்டுப்போக மனமில்லாதவளாய், கல்லூரிக்குள் ஒரு மரத்தின் வேரில் உட்கார்ந்து கொண்டாள்.

கல்லூரி முதல்வரின் அறைக்குள் முத்தையா குழுவினர் நுழையும் முன்னதாலேயே, குத்து வெட்டுபோல் உள்ளே வாக்குவாதம் பலத்துக் கேட்டது. வெளியறையில் கல்லூரி ஊழியர்கள். அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மாணவத் தலைவர்கள் உள்ளே செல்லத் தயங்கியபடி, வெளியே நிதானித்தார்கள். டிரஸ்ட் போர்ட் சேர்மன் அப்பாவுவின் குரல், குரல்வளையே தெறிப்பதுபோல் ஒலித்தது. இதர உறுப்பினர்களின் குரல், விட்டு விட்டுக் கேட்டது. கல்லூரி முதல்வரின் குரலே கேட்கவில்லை. அப்பாவு, எகிறினார்.

"நீங்க ஆக்டிங் பிரின்ஸ்பால் என்கிறதை மறந்துட்டிங்க... நாளைக்கே போர்டை கூட்டி, ஒங்களை ரிவர்ட் பண்ண அதிக நேரம் ஆகாது. எங்களைக் கேட்காமல் எப்படி ஸார் அந்தப் பசங்ககிட்ட போகலாம்? நாங்க எதுக்கு இருக்கோம்?

இன்னொரு குரல்:

"நாங்க பொது வாழ்க்கையில இருக்கிறவங்கட யார் யாரை எப்படி பழிவாங்கணுமுன்னு தெரிஞ்சவங்க மாணவப் பயல்க, நம்ம காலுல விழப்போற சமயத்துல, நீங்க போய் அவங்க காலுல விழுந்திட்டிங்க. எங்க முகத்துல கரி பூசிட்டிங்க ஸார். கடைசில, பசங்ககிட்டே தோத்துட்டிங்களேன்னு, எங்க கட்சிக்காரங்க கேட்பாங்க. அண்ணன் கேட்பாரு. அவங்கள லாக்கப்புல போடுறதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..?

"இப்போ, நான் டிரஸ்ட் போர்ட் சேர்மன் என்கிற முறையிலே சொல்றதை கவனமாய்க் கேளுங்க. நீங்க பிரின்ஸ்பால். இன்னைக்கு இருப்பிங்க, நாளைக்கு போவீங்க. இப்போ இந்தத் துள்ளு துள்ளுற பசங்களும், இன்னும் ஒரு வருஷத்துலயோ அல்லது ரெண்டு வருஷத்துலயோ எங்கேயோ மறையப் போறவங்க அதனால, நீங்க வரச்சொன்ன பசங்கள அப்படியே அனுப்பிடனும் முதல்ல, மன்னிப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/32&oldid=558635" இலிருந்து மீள்விக்கப்பட்டது