பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 22

ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை. ஒவ்வொருவரும் தத்தம் பின்னணிக்கு ஏற்ப, அந்த அறையில் உள்ள பொருட்களில் எதாவது ஒன்றின்மீது, தேர்ந்த பார்வையை வீசினார்கள். அங்கிக்காரர் கொடி தினத்திற்காக வைத்திருந்த நன்கொடைப் பெட்டியைப் பார்த்தார். டிரஸ்ட் சேர்மன், தன் முட்டியையே பார்த்தார். டை அடித்தவர், மேஜை மீதிருந்த கிளாஸைப் பார்த்தார். முத்தையா, முதல்வரையும், முதல்வர் முத்தையாவையும் பார்த்துக் கொண்டார்கள்.

மெளனம் கரைந்து, நிசப்தமாக ஒடிக் கொண்டிருந்த சமயம். முதல்வர், தலையை ஒரு தடவை ஆட்டியபடியே, முத்தையாவைப் பார்த்துக் கேட்டார்.

"பத்து நாளாய் போராடுறீங்க. இதனால, ஒங்களுக்குப் படிப்பும், எங்களுக்கு நிம்மதியும் கெட்டுப் போயிட்டு, திஸ் இஸ் பேட் வெரி வெரி பேட் இப்போ என்ன செய்யனுமுன்னு நினைக்கிறிங்கட?

முத்தையா, உறுதியோடு பதிலளித்தான். -

"என்ன நடந்தது, எப்படி நடந்ததுன்னு எல்லோருக்கும் தெரியும் மனச்சாட்சி உள்ளவர்களுக்குப் புரியும் மாணவர்களை ரத்தம் வரும்படி அடித்தது மட்டுமல்ல, இப்போ அந்த ரத்தத்தை லாக்கப்புல போலீஸ் குடிக்குது. தாக்கினவங்க. வெளியே குதிக்காங்க. தாக்கப்பட்டவங்க, உள்ளே தவிக்காங்க.."

"ஆல் ரைட் பழைய கதை வேண்டாம் ஒங்க கோரிக்கைகளைச் சொல்லுங்க."

இன்னொரு மாணவன் பேசினான்:

"சொல்லித் தெரியுற அளவுக்கு, சிக்கலான கோரிக்கை இல்ல. முதலில் லாக்கப்புல இருக்கிற எங்க சகோதரர்கள் விடுதலை ஆகணும். அவங்களைத் தாக்கியவங்க மேல், நீங்களே போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கணும். எக்ஸ்பெல்ஷன் ஆர்டர்களை ரத்து செய்யனும். எல்லாவற்றிற்கும் மேல், இனிமேல் இந்த மாதிரி அநியாயமான நிகழ்ச்சிகள் நடக்காமல் பார்த்துக்கனும் இது நிஜமான குற்றவாளிகள் மேல நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முடியும்’

முதல்வர், அமைதியாகக் கேட்டார்.

"எக்ஸ்பெல்ஷன் ஆர்டர்களை ரத்து செய்துடுறேன். மாணவர்களை விடுதலை செய்ய ஏற்பாடு செய்யுறேன். நீங்க வகுப்புக்குத் திரும்பனும். மேற்கொண்டு இந்த விவகாரத்தை இப்படியே விட்டுடனும் என்ன சொல்றீங்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/34&oldid=558637" இலிருந்து மீள்விக்கப்பட்டது