பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 * சத்திய ஆவேசம்

முத்தையா, ஏதோ சொல்லப் போனான். அதற்குள் சேர்மன் அப்பாவு, முதல்வரின் கண்களுக்கு எதிராக தன் விரல்களை ஆட்டியபடி எதிர் வழக்காடினார்.

"பிரின்ஸ்பால் ஸ்ார். நிலைமை விபரீதமாய் போயிடும். நான் டிரஸ்ட் சேர்மனாய் இருக்கிற வரைக்கும், படிக்கதுக்குன்னு வராத பசங்களை, நீங்க திரும்பச் சேர்க்க முடியாது. கல்லூரி ஊழியரை அடித்த மாணவ ரெளடிகள் மேல் போலீஸ்தான் வழக்குப் போட்டிருக்கு. அவங்க எடுக்கிற சட்டப்படியான நடவடிக்கையில் குறுக்கிட எனக்கோ, ஒங்களுக்கோ அதிகாரம் கிடையாது."

முத்தையா, அப்பாவுவைப் பார்க்காமல், முதல்வரைப் பார்த்தபடியே கேட்டான்.

"ஸார். சட்டம் பேசுற சேர்மனுக்குச் சொல்லுங்க. இது, கல்லூரியின் அன்றாட நிர்வாகம் சம்பந்தமான விவகாரம். இதுல பேசவோ. இப்போ. இந்த அறையில இருக்கவோ, அவருக்கு சட்டப்படி உரிமை கிடையாது. நாங்க பேச வந்தது உங்களிடம்தான்."

இன்னொரு மாணவப் பிரதிநிதியால், தன் குரலில் காரத்தை ஏற்றிப் பேசாமல் இருக்க முடியவில்லை.

"எங்களுக்கு இப்போ ஒன்று தெரியனும் ஸார். நீங்க பிரின்ஸ்பாலா..? இவர் பிரின்ஸ்பாலா..? இவர் யார் ஸார் குறுக்கே பேச?

அப்பாவு, இடைமறித்தார். "என்னைப் பார்த்தா, யாருன்னு கேட்கிறே...? இது எங்க தாத்தாவோட காலேஜ், இவர் டெம்பரவரி பிரின்ஸ்பால். நான் பெர்மனன்ட் பிரின்ஸ்பால்-மேக்கர். ஞாபகம் வச்சுக்கோ. யாரைப் பார்த்து யாருன்னு கேட்கிறே..?

"தாத்தா காலத்துப் பேச்சு எதுக்கு ஸார்.?

முத்தையா, தன் தோழனை அடக்கிவிட்டுப் பேசினான்.

"நீ சும்மா இருப்பா. இவர் வெண்ணெய் திரளும்போது தாழியை உடைக்கணுமுன்னே வந்திருக்கார். நாமும், அவர் மாதிரி நடக்கப்படாது. பிரின்ஸ்பால் லார் இவரு, ஒங்களுக்குப் பெரியவராய் இருக்கலாம். ஆனால், எங்களுக்குப் பெரியவர் நீங்க ஒருத்தர்தான். இவருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்ல. தயவுசெய்து முதலில் இவரையும், இவங்களையும் வெளியே போகச் சொல்லுங்க.."

அப்பாவு, திடீரென்று தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைக் கீழே தள்ளிப் போட்டுவிட்டு, எழுந்தார். வாயில் இருந்து வார்த்தைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/35&oldid=558639" இலிருந்து மீள்விக்கப்பட்டது