பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 24

வராமல், வார்த்தைகளில் இருந்து வாயே வெளியேறுவதுபோல் பேசினார்.

"டேய் பொறுக்கிப் பசங்களா..! சோதாப் பசங்களா. யாரைப் பார்த்துடா வெளியேறச் சொல்றே.? இது எங்க தாத்தா கட்டுன காலேஜ். ஒப்பன்க கட்டுன காலேஜ் இல்ல. முதல்ல. நீங்க வெளியே

போங்கடா. சோதாப் பசங்களா.."

முத்தையாவை மீறி, இன்னொரு மாணவன் பேசினான்

"நாங்க பொறுக்கியாவே இருந்துட்டுப் போறோம். ஆனால், ஒங்களை மாதிரி, காலேஜ் பணத்தை பொறுக்கித் தின்னல. ஒரு கல்லூரி நிர்வாகி மாதிரி பேசாமல், அசல் சோமாறி மாதிரியா ஸார் பேசுறது..?

அங்கிக்காரர், அப்பாவுவை தன் கைக்குள் அடக்கிப் பிடித்துக் கொண்டே, சவால் விட்டார்.

"இப்போ என்னடா பண்ணணுமுன்னு நினைக்கிங்க..? ஒங்க பசங்கள, இன்னும் போலீஸ்ல செமத்தையா உதைக்க வச்சு, ஒவ்வொருவனுக்கும் ரெண்டு வருஷமாவது வாங்கிக் கொடுக்கலன்னா பாரு. இல்லன்னா. அரசியலுல இருந்து விலகுறேன் வாரு.

முத்தையா, அமைதியாகக் கேட்டான். "அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், நாங்க சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் இருப்போம்."

அப்பாவு, மகிழ்ச்சியோடு கூவினார். "பேஷாப் போச்சு. அதைச் செய்யுங்கடா மொதல்லே. இந்த காம்பவுண்டுக்குள்ளேயே, உண்ணாவிரதத்துல சாகிறவங்களை எரிச்சுடலாம்."

"எரிக்கிறதுக்கு முன்னால, நீயே எரிந்து போயிடுவே." 'இப்போ என்னடா செய்யனும்? காலேஜூன்னு நினைச்சிங்களா..? இல்ல ஒப்பனோட வீடுன்னு நினைச்சிங்களா..? பிரின்ஸ்பால் நினைக்கிறதை அவரால முடிக்க முடியுமா? அப்புறம் இவருதான் உயிரோட இருக்க முடியுமா? எங்க அப்பன்க பிறக்குமுன்னாலேயே பிறந்த காலேஜ்டா இது. சீச்சீ. பொறுக்கிப் பசங்களைச் சேர்த்து, காலேஜே பொறுக்கித்தனமா மாறிட்டு."

முத்தையா, எழுந்து நிதானமாகக் கேட்டான்.

"மிஸ்டர். அப்பாவு நாங்க சின்ன வயசு, பெரியவங்களை, மற்ற எதுக்கும் மதிக்காட்டாலும், வயதுக்காகவாவது மதிக்கிறவங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/36&oldid=558640" இலிருந்து மீள்விக்கப்பட்டது