பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 * சத்திய ஆவேசம்

வயதுக்கு மரியாதை கொடுக்கப்படாதுன்னு நாங்க நினைக்கும் படியாய் பேசாதிங்க."

அப்பாவு, தன் மிரட்டலால், மாணவர்களின் சுருதி குறைவதாக நினைத்து, அந்த சுருதியையே இல்லாமல் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் மேலும் அதட்டினார்.

"போடா பொறுக்கி. நீ மரியாதை கொடுத்தால்தான், எனக்கு அவமரியாதை. ஒன் அப்பன், என்ன வேலை செய்யுறான். நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு நல்லாவே தெரியும் கார்ப்பரேஷன் குப்பையை அள்ள வேண்டியவன், காலேஜுக்கு வந்தால், இப்படித்தான் ஆகும். ஒன்னை மாதிரி பசங்கள உயிரோட எரிச்சால்தான் காலேஜ் உருப்படும்’

முத்தையா, சட்டையை மடித்து விட்டபடியே

"இந்தா பாருய்யா பெரிய மனுஷா. நீ எங்களை எரிக்கிறது அப்புறம் இப்போ நீ உயிரோட திரும்ப முடியாது. நான், தெருவுல டிரக் வண்டில உட்கார்ந்து, கார்ப்பரேஷன் விளக்குல படிக்கிறவன். இவங்க மண்ணெண்ணெய் விளக்குல படிக்கிறவங்க... எங்களை உயிரோட எரித்துட்டு, நீ உயிரோட இருக்க முடியாது. நான் சொல்றதை நல்லா கேளு என் தோழர்கள், லாக்கப்புல இருந்து, இதோ இந்த அறைக்குள் வருமுன்னாலே, ஒங்க முன்று பேரையும் நாங்க வெளியே விடப்போறதில்ல. தைரியமிருந்தால் நடந்து பாரு பார்க்கலாம். அட்மிஷனுக்கும் அப்பாய்மென்டுக்கும் லஞ்சம் வாங்குற நீயா மிரட்டுறே? ஊழல்காரன் மிரட்டும் போதுதான், சரித்திரம் அவனை மிரட்டும். ஒன்கிட்டே என்ன பேச்சு. எங்கள் சகோதரர்கள், இந்த இடத்துக்கு வருமுன்னால, நீ எந்த இடத்துக்கும் போகமுடியாது. தைரியமிருந்தால் நட பார்க்கலாம்."

அப்பாவுக்கு மீசைதான் துடித்தது. வார்த்தைகள் வரவில்லை. எதிர்பாராத அதிர்ச்சி. அவரைப் போலவே, அதிர்ச்சியடைந்த மற்ற இரண்டு பேரும் தங்கள் அதிர்ச்சியை மறைக்கும் சார்பில், பெரிய மனித் தோரணையில், அப்பாவு மாணவர்களை அடித்து விடக் கூடாது என்ற பாவலாவில் அவரைப் பிடித்துக் கொண்டார்கள். ஆஜானுபாகுகளாய், மார்புகள் விம்மிப்புடைத்து நின்ற மாணவர்களைப் பார்த்ததும், பேசப்போன அங்கிக்காரர் வாய்க்குள்ளே, ஒரு டயலாக்கை முணுமுணுத்தார்.

கல்லூரி முதல்வர், ஒருவித ரசனையோடு எழுந்தார். அதற்குள் டெலிபோன் ஒலித்தது. அதை காதுகொடுத்துக் கேட்டுவிட்டு, தேங்க்யூ. தேங்க்யூ. என்று சொல்லி வைத்துவிட்டு நிமிர்ந்தார். எல்லோரையும் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டபடியே, "தயவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/37&oldid=558641" இலிருந்து மீள்விக்கப்பட்டது