பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 26

செய்து எல்லோரும் உட்காருங்க. நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில தொடர்பு உள்ளவங்க. இது காலேஜ். கார்ப்பரேஷன் மைதானம் இல்ல. மொதல்ல உட்காருங்க.." என்றார்.

எவரும் உட்காரவில்லை. முதல்வர், இப்போது, தன் பாட்டுக்குப் பேசினார்.

"ஆல் ரைட். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இருப்பது கல்வி. அந்தக் கல்வியே, ஒரு பிரச்சினையாகிடப்படாது. முத்தையா! மாணவர்களை விடுதலை செய்யும்படி, ஏற்கெனவே டெப்டி கமிஷனர்கிட்டே பேசிட்டேன். இப்போ போன் வந்துதே. அதுல. மாணவர்களை விடுதலை செய்திட்டதாய் இன்ஸ்பெக்டர் பேசினார். நான், எக்ஸ்பெல்ஷன் ஆர்டர்களையும் ரத்து செய்துடறேன். ஆனால், நீ மாணவர்களைத் தாக்குனவங்கமேல் நடவடிக்கை எடுக்கணுமுன்னு வற்புறுத்தப்படாது. இது ஒரு காம்ப்ரமைஸ். தாக்குனவர், நம்ம சேர்மனோட சொந்தக்காரர். மிஸ்டர் அப்பாவுக்கு மதிப்பளித்து, தாக்குனவனை மன்னிச்சிடனும் ஒகே இந்தாப்பா. ராஜதுரை. இப்படி வா."

"முத்தையாவும் இதர மாணவர்களும் யோசித்துக் கொண்டிருந்த போது, ராஜதுரை என்ற கல்லூரி ஊழியர் வந்து, முதல்வரின் முகத்தைப் பார்த்தார். முதல்வர், "நான் சொல்றதை எடு. தி எக்ஸ்பெல்ஷன் ஆர்டர்ஸ்."

ராஜதுரை, பயபக்தியோடு எழுதப்போனபோது, அப்பாவு அதட்டினார்.

"டேய் ராஜதுரை. பிரின்ஸ்பால் சொல்றதை எடுக்காதடா.. அவரு என்ன செய்துடுவார்னு பார்த்துடலாம்."

பயந்தாங்கொள்ளி ராஜதுரை, படு பயந்தாங்கொள்ளியாகி, நடுங்கினான். முதல்வரும் அதட்டினார்.

"சொல்றதை எடுப்பா... எடுக்கிறியா...? இல்ல எடுத்த எடுப்பிலேயே சஸ்பென்ட் செய்யனுமா?

அப்பாவு, குதித்தார்.

"எடுக்காதடா. அப்படி எடுத்தே. நீ நிச்சயம் டிஸ்மிஸ் ஆவே. ஒன்னை வேலையில் வைத்தவன் நானா? இவரா? இவர் இன்னைக்கு இருப்பார், நாளைக்கே போவார். என்ன சொன்னாலும் எடுக்கப் படாது. இது என்னோட உத்தரவு."

சாதுவான பேராசிரியர் பெருமாள்.சாமி, இப்போது காடு தாங்காத சினத்தோடு கத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/38&oldid=558642" இலிருந்து மீள்விக்கப்பட்டது