பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 34

"மன்னிக்கனும் பிரபு. உன் தனிப்பட்ட விருப்பம் முக்கியம் இல்ல. இந்த மாணவப் பட்டாளத்தோட ஒட்டு மொத்தமான விருப்பமே முக்கியம்."

"நானும் எலெக்ஷன்ல, நானூறு ஒட்டு வாங்கினவன்." அதே அசரீரிக் குரல்:

"அதுல கூட, இருநூறு கள்ள ஒட்டுடா..."

முத்தையா, இடைமறித்தான். "தயவுசெய்து விவகாரத்திற்கு வெளியே யாரும் போகக்கூடாது. மாணவத் தோழர்களே சொல்லுங்கள். வகுப்புக்குத் திரும்பணுமா? போலீஸ்காரர்களுக்கும் டிரஸ்ட் போர்டுக்கும் பயந்து, வகுப்புப் பெட்டிகளுக்குள் பெட்டிப் பாம்பாய் பதுங்கனுமா? அல்லது சீறும் நாகங்களாய் மாறனுமா? சொல்லுங்கள் தோழர்களே."

மாணவர்கள், தனித்தும் சேர்ந்தும் பதிலளித்தார்கள். "பேராசிரியர். பெருமாள்சாமி, மீண்டும் பதவிக்கு வரும்வரை, நமக்கு வகுப்புகள் சிறைச்சாலைகள். அக்கிரமத்திற்கு முடிவு கட்டுவோம். அக்கிரமக்காரனை முதலாவதும், அக்கிரமத்தை இரண்டாவதும் கவனிப்போம்."

பிரபு, கொடிக்கம்பம் இருக்கிற சுழல் மேடையில் ஏறிக் கத்தினான்.

"முடியாது. முடியவே முடியாது. இது டிரஸ்ட் போர்டுக்கும் பெருமாள்சாமிக்கும் உள்ள ஒரு விவகாரம் காலேஸ் பணத்தை, அவர் கையாடி இருக்கார். இவங்க ஆக்ஷன் எடுத்திருக்காங்க ஊழலுக்கு ஒத்துப் போகமுடியாது. கல்லூரிப் பணத்துல மகளுக்கு நகை செய்து போட்டிருக்கார்."

முத்தையாவால், கத்தாமல் இருக்க முடியவில்லை. "ரொம்ப நன்றி பிரபு. டிரஸ்ட்போர்டே இன்னும் என்னென்ன குற்றச் சாட்டுகளை சுமத்தலாமுன்னு தீர்மானிக்கும் முன்னால, நீ அவங்களுக்கு ஐடியா கொடுத்து, ஒன்னோட துரோகப் புத்தியைக் காட்டிக் கொடுத்ததற்கு நன்றி. இப்போ நீ எங்களுக்கு விலகி, வழி விடப் போறியா? விலக்கணுமா? இரண்டு நிமிடம் அவகாசம்."

வயதான தமிழாசிரியர் ராமய்யா, பிரபுவின் முன்னால் வந்து "அடே மாணவப் பதரே! சரியான குடிலன்டா நீ..." என்றார். போலீஸ்காரர்கள் அவரை முறைத்தார்கள். யூ.ஜி.ஸி. சம்பளப் போராட்டத்திலும், எஸ்.ஐ.டி. கல்லூரிப் போராட்டத்துக்காகவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/46&oldid=558650" இலிருந்து மீள்விக்கப்பட்டது