பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器舒 * சத்திய ஆவேசம்

வேலூருக்கும் சென்ட்ரலுக்கும் போயிருந்த அந்த வயதான ஆசானும், அவர்களைத் திருப்பி முறைத்தார். இரு தரப்பிலும் கண்ணை யார் முதலில் விலக்குவது என்ற கண் பரீட்சை, இதற்குள் மாணவர்கள் முழக்கங்களாய் பேசினார்கள்.

"அடக்குவோம் அடக்குவோம்! அப்பாவுவை அடக்குவோம்!”

"அஞ்சோம் அஞ்சோம் - போலீஸ்

அடக்குமுறைக்கு அஞ்சோம்." முத்தையா, கூட்டத்தை கண்ணிர் மல்கப் பார்த்தான். எந்த மாணவர்கள் போலீஸ் லாக்கப்பில் அடிபட்டு, இன்னும் காயம் ஆறாமல் தவிக்கிறார்களோ, அவர்களே, இப்போது வாய் வலிக்க, காது வலிக்கக் கத்தினார்கள். உணர்ச்சிகள் கண்ணிராய் கொட்டப் போனபோது, விரலால், கண்ணிரைச் சுண்டிவிட்டான்.

மாணவர் கூட்டமும், ஆசிரியர் கூட்டமும், நான்கு பக்கமும் கரையுடைத்து, நீர் அலைகளாய் ததும்பியபோது, அப்பாவு நிமிர்ந்து நின்று, போலீஸ்காரர்களைப் பார்த்தார். போலீஸ் நண்பர்கள், கம்புகளை குறுக்காக வைத்தக்கொண்டு கூட்டத்தைத் தள்ளப் போனார்கள். பிரபு, இளக்காரக் குரலில் எச்சரித்தான்.

"மிஸ்டர். முத்தையா...! கடைசியாய் சொல்றேன். நீ மாணவர்களுக்கு அடிவாங்கிக் கொடுக்க நினைப்பது அயோக்கியத் தனம். பேராசிரியர் பெருமாள்சாமிக்கு, நீ மருமகனாய் போவது சொந்த விவகாரம். அதுக்காக, ஒரு பொது விவகாரத்தை உருவாக்குவது விகாரம்."

பிரபு, தன் மொழியழகை போலீஸ்காரர்கள் ரசிக்கிறார்களா என்று பார்த்தான். அவர்களோ லத்திக் கழிகளின் இருபக்கத்து மொழிகளையே பார்த்தார்கள். பிரபுவோ, யாரைப் பார்த்துச் சொல்ல வந்தானோ, அவளைப் பார்த்தான். அவளோ, உதடுகளைக் கடித்தாள். பிரபுவை சேர்த்துத் தின்னப் போகிறவள்போல் பார்த்தாள்.

அப்போதுதான் முத்தையாவும் பார்த்தான். மேகலா எப்போது வந்தாள் என்பது தெரியவில்லை. எதையோ சொல்ல வந்தவள் போல், அதே சமயம், அந்த அமளிக்கு ஒரளவு பயந்தவள் போல, முத்தையாவை நோக்கி இரண்டடி முன் வாங்கி, மூன்றடி பின்வாங்கி உழன்று கொண்டிருந்தாள்.

இப்போது பிரபுவின் பேச்சால், மேகலா இயல்பாக வந்த இயலாமையும், கூச்சமும் அற்றுப்போனவளாய், கூட்டத்தின் முகப்பிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/47&oldid=558652" இலிருந்து மீள்விக்கப்பட்டது