பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 36

வந்தாள். இடுப்பில் சொருகியிருந்த ஒரு காகிதத்தை எடுத்தாள். முத்தையாவைத் தனியாகக் கூப்பிட்டு, அப்பாவின் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, அதற்குரிய வியாக்கியானங்களைச் சொல்ல நினைத்தவள், பிரபுவின் பேச்சை நிருபிப்பதுபோல் அப்படிச் செய்யக்கூடாது என்று எண்ணியபடியே, காகிதத்தை முத்தையாவிற்கு அருகே நின்ற ஒரு மாணவனிடம் நீட்டினாள். அதை வாங்குவதற்காக கையை நீட்டிய முத்தையாவும், நீட்டிய கரத்தை மடக்கிக் கொண்டான். மேகலா, பொதுப்படையாகப் பேசினாள்.

"இது அப்பாவோட மெஸேஜ். எல்லாருக்கும் இதைப் படித்துக் காட்டனும் என்பது அவரோட விருப்பம்."

மேகலா, சிறிது தள்ளிப்போய் நின்று கொண்டாள். போலீஸார், அவளை "அரெஸ்ட் செய்யலாமா என்பதுபோல் பார்த்தார்கள். கடிதத்தை வாங்கிய மாணவன், அதை கண்ணால் நோட்டம் போட்டுவிட்டு, முத்தையாவிடம் கொடுத்தான். முத்தையா அந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க திடுக்கிட்டவன் போல், முகம் வெளுக்க, கண் சிவக்கத் தோன்றினான். கடிதத்தை கையிலேந்தி சிறிது நேரம் யோசித்தவன், பிறகு உரக்கப் படித்தான்.

"அன்புள்ள மாணவர்களுக்கு, என்னை டிரஸ்ட்போர்ட் சஸ்பென்ட் செய்திருப்பது, என்று சொந்த விவகாரம் - மாணவர்களுக்குச் சம்பந்தப்படாத விவாகரம். இன்னும் சொல்லப்போனால், இதில் தலையிட மாணவர்களுக்கு உரிமை கிடையாது. ஆகையால், எந்த மாணவரும், எனக்காக எந்த வகையிலும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை."

"என் தன்மானத்தை நிலைநாட்டிக் கொள்ளும் ஆற்றலும் உறுதியும் எனக்கு உண்டு. என்மீது பழி போட்டு போராட்டம் நடத்த வேண்டாம்."

“எப்படி இருந்தாலும், எல்லா மாணவச் செல்வங்களும், தகுதியில்லாத எனக்கு அளவுக்கு மீறிய அன்பைக் காட்டியதற்கு நன்றி. அந்த அன்பே, எனக்கு இப்போதைய ஒரே ஆறுதல். அந்த ஆறுதலைக் கெடுக்கும்படியோ, அன்பு பொய்யானது என்பதைக் காட்டும்படியோ, எனக்காக எந்த நடவடிக்கையும் மாணவர்கள் செய்யக் கூடாது.

இப்படிக்கு, பேராசிரியர் எல். பெருமாள்.சாமி,

முத்தையா ஓங்கிய குரலில் வாசிக்க வாசிக்க மாணவக் கூட்டம் ஒடுங்கிக் கொண்டிருந்தது. பலருக்கு, போலீஸ் கெடுபிடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/48&oldid=558653" இலிருந்து மீள்விக்கப்பட்டது