பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 * சத்திய ஆவேசம்

இருந்தும், டிரஸ்ட்போர்டின் கொடுமையில் இருந்தும் தப்பித்த ஆறுதல். இன்னொரு தரப்பினர் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மாணவன், "இது நம் பேராசிரியரோட தனிப்பட்ட விவகாரம் இல்ல. ஒரு முதல்வர் பழிவாங்கப்பட்ட பொது விவகாரம். இப்போதே நாம் ஏதாவது செய்யாவிட்டால், நமக்கு நாமே சமாதி கட்டுவதாகிவிடும்.” என்று பின்னால் இருந்து சொல்லியபடியே கூட்டத்திற்கு முன்னால் வந்தான். ஐ அக்ரி வித் ஹிம் என்றார், தமிழாசிரியர் ராமய்யா.

மேகலா, மீண்டும் கூட்டத்தின் முகப்பிற்கு வந்து, "நீங்க போராடுங்க, வேண்டாங்கல்ல. ஆனால், அதுக்கு அவர் தலையை உருட்டக் கூடாதுன்னு மிஸ்டர். பெருமாள்சாமி சொல்லச் சொன்னார். இதைக் கடிதத்தில் எழுத அவருக்கு மனசு வர்ல. நிலைமை மோசமானால் என்னை இப்படிச் சொல்லச் சொன்னார்.”

முத்தையாவும், இதர மாணவர்களும் திடுக்கிட்டார்கள். மாணவர் போராட்டத்தை பேராசிரியர் தப்பாகப் புரிந்திருக்கிறாரா? அவர் தலையை உருட்ட வேண்டாம் என்றால், என்ன அர்த்தம்? வேலை கெட்டுப்போய் போராட்டம் செய்கிறோம் என்றுதானே பொருள்? அவரை சாக்காகப் பயன்படுத்துவதாகத் தானே அர்த்தம்.

கூட்டம் நிசப்தமாக நின்றது. இரண்டு மூன்று நிமிடங்கள் யாருக்கும் பேச்சோடவில்லை. இறுதியில் ஒரு மாணவன், "சரி. என்ன செய்யலாமுன்னு முடிவு எடுக்க வேண்டாமா? என்றான்.

முத்தையா, பேசாதபடியே கூட்டத்தைப் பார்த்தான். கூட்டத்தில் ஆளுக்கொரு குரல்களாக வலுத்துக் கொண்டிருந்தது. எல்லோரும் அவன் முடிவை எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். என்ன செய்யலாம்?

ண்பர்களே. bவரே விரும்பாதபோது, o க்காகப் “سر بہ = போராட்டம் நடத்த அவசியமில்லை. பேராசிரியர்பெருமாள்சாமி நம் போராட்டத்தின் உள்நோக்கத்தையே சந்தேகப்பட்டுவிட்டார். என்றாலும், அவர் கல்லூரிப் பணத்தைக் கையாடினார் என்ற கேவலமான குற்றச்சாட்டை மாணவர்கள் நம்பவில்லை. அவர் அப்பழுக் கற்ற மாமனிதர். இப்படிச் சொல்வதற்கும் பேராசிரியர் உள்ளர்த்தம் காணக்கூடாது என்ற நமது ஒருமித்த கருத்தை அவரது மகள் செல்வி மேகலாவை, தன் தந்தையிடம் தெரிவிக்கும்படி உங்கள் சார்பில், பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

மாணவர்கள், தனித்தனியாகவும் குழுக்குழுவாகவும் கலைந்தார்கள். அதுவரை ஒன்றியிருந்த ஆசிரியர்கள், தத்தம் வகுப்புகளுக்கு, தலைகளைத் தொங்கப் போட்டபடியே நடந்தார்கள். பிரபு, அப்பாவு ஒருவித ஏமாற்றத்துடன், தன் கையில் இருந்த ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/49&oldid=558655" இலிருந்து மீள்விக்கப்பட்டது