பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

கே. முத்தையா ஆசிரியர்,

ஒரு நாவல் உருவாகிறது என்றால், கான் வாழும் காலத்தில் சமுதாய வாழ்வை, அதன் சிருஷ்டிகர்த்தா உணர்ச்சி பூர்வமாகவும் உயிர்த்துடிப்புடனும் ஒரு படப்பிடிப்பை நம்முன் வைக்கிறார் என்று பொருள்.

சிலப்பதிகாரம் 1500 ஆண்டுகளுக்கு முந்திய இசை நாடகம்; என்றாலும் அது அந்தக் காலத்திய சமுதாய வாழ்வை தத்ரூபமாக, உணர்ச்சி மயமாக நமக்கு எடுத்துக் கூறுகிறது.

இன்று வரும் நாவல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். பண்டைய நிகழ்ச்சிகளை சரித்திர நாவல்கள் என்று பெயரில் நம்பமுடியாத நிகழ்ச்சிகளாகத் தொகுப்பது. எதையும் சாதித்திடும் சர்வவல்லமை வாய்ந்தவர்களாக பாத்திரங்களை உருவாக்குவது. எத்தனை விளக்கங்கள் தந்தாலும் இப்படிப்பட்ட நாவல்கள், கருத்து முதல்வாத கோளாறில் சிக்கி அவை மனிதவாழ்வில் நிகழும் உண்மைகளல்ல என்ற நிலைக்குத் தள்ளப்படும்.

இரண்டாவது, வாழ்க்கையில் இருப்பதெல்லாம் தெய்வீக சிருஷ்டி, நம் சமுதாய வாழ்வில் நிகழும் சம்பவங்கள் எல்லாம் தடுக்க முடியாதவை, இந்தச் சமுதாய வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் அன்று முதல் இன்றுவரை நாளையும் நடக்கத்தான் செய்யும் - இவைகளையும் மனிதன் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்தும் தலைவிதி தத்துவ நாவல்கள்.

மூன்றாவதாகக் குறிப்பிடவேண்டியவை இன்றைய எதார்த்த வாழ்வும், அதில் நிகழும் நிகழ்ச்சிகளும். இதில் தோன்றும் கதாபாத்திரங்களும் இன்றைய எதார்த்தமான சமுதாய அமையபின் சிருஷ்டிகளே. இந்த அமைப்பு மாறினால், இந்த நிகழ்ச்சிப் போக்குகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/5&oldid=558607" இலிருந்து மீள்விக்கப்பட்டது