பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 38

புண்ணைப் பிசுக்கி, அதன் ரத்தத்தைச் சுவரில் தேய்த்தார். அங்கிக்காரர் போலீஸ்காரர்களிடம், சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

முத்தையா, தன்னந்தனியாக, நடந்து கொண்டிருந்தான். ஆயிரம் சிந்தனைகள் அவனை அலைக்கழித்தன. திடீரென்று, ஒரு பியூன் வந்து, ஆக்டிங் பிரின்ஸ்பால் கூப்பிடுவதாகச் சொன்னான். முத்தையா வேண்டா வெறுப்பாகப் போனான்.

பேராசிரியர்.பெருமாள்சாமியின் சுழற் நாற்காலியில், வைஸ் பிரின்ஸ்பாலாக இருந்த தமிழ்ப் பேராசிரியர். மாணிக்கம் முத்தையாவைப் பார்த்ததும் எழுந்தார். பின்னர், அவன் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தைப் புரிந்தவர்போல், "உட்காருப்பா.." என்று சொல்லிவிட்டு, தானும் உட்கார்ந்தார். முத்தையா, தலைகவிழ்ந்து அமர்ந்தான். தற்காலிக முதல்வர் மன்றாடுவதுபோல் பேசினார்.

"மிஸ்டர். அப்பாவு! ஒன்னை எச்சரிக்கச் சொன்னார்." முத்தையா, அவர்ை நிமிர்ந்து பார்த்தான். “ஸார். அவர் எச்சரிக்காமல் இருந்தாலும், நீங்க எச்சரியுங்க. அதுக்கு உங்களுக்கு உரிமை உண்டு. இந்த காலேஜில, என் தந்தை உங்கள் மூலந்தான் என்னைச் சேர்த்தார். ஆனால் அதுக்காக, குறைந்தபட்ச மணிதனுக்குக்கூட இருக்கிற தகுதியில்லாத ஒருவரை மேற்கோள் காட்டி எச்சரிக்க வேண்டாம்."

"தப்பா நினைக்கிறப்பா. நான், உன்னை எச்சரிக்கக் கூப்பிடல. நீயும், நீ சொல்றதுக்குக் கட்டுப்படும் மாணவர்களும், என்னைத் தப்பாக நினைக்கக்கூடாது என்பதுக்குத்தான் கூப்பிட்டேன். என்னை பிரின்ஸ்பால் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி, அப்பாவு சொல்லும்போது, என்னை விட்டுடுங்கன்னு இரண்டு கையாலயும் அவரக் கும்பிட்டேன். அவரோ, அப்படின்னா நீங்க பெருமாள்சாமி ஆளா.. என்று கேட்டார். அதுக்குமேல என்னால பேச முடியல. ஏன்னா, என்னோட நிலைமை அப்படி. ஐந்து பெண்களை நான் கரையேற்றணும். பாரி மகளிர்க்கு வந்த நிலைமை என் குழந்தைகளுக்கு வரப்படாது. சொத்து பத்து இல்லாதவன். இந்த அப்பாவுவை என்னால விரும்பவும் முடியல. மீறவும் முடியல. அவர் தெருவிலேயே குடியிருக்கேன். போன வாரம் நாலைந்து ரவுடிப் பசங்க என் ரெண்டாவது பெண்ணைப் பின் தொடர்ந்த போது, அப்பாவுகிட்டேதான் முறையிட்டேன். அவர்தான் அவங்களை அடக்கினார்"

தாற்காலிக முதல்வர் மாணிக்கனார் எழுந்து நின்றே பேசினார்.

"இந்தப் பதவியை வேண்டாமுன்னு சொல்லியிருந்தால், அவரே அந்தப் பசங்களை, என் பெண் மேல ஏவி விடுவார். இதுல ரிஸ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/50&oldid=558656" இலிருந்து மீள்விக்கப்பட்டது