பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 40

"அப்பா. ஒங்களைச் சாயங்காலம் வீட்டுக்கு வரச்சொன்னார். கண்டிப்பாய் வரச் சொன்னார்."

முத்தையா, அவளை ஏறிட்டு நோக்கினான். எடுத்தெறிந்து பேச நினைத்தான். முடியவில்லை. அவள் நீட்டிய முகவரிக் காகிதத்தை வாங்கிக் கொண்டான். அதே சமயம், தனது வீட்டுக்கு எப்படி வரவேண்டும் என்று அவள் விளக்கம் அளித்த முற்பட்டபோது, அதை கேளாதவன்போல் போய்விட்டான்.

பேராசிரியர் பெருமாள்சாமியின் வீட்டுக்குப் போகலாகாது என்ற நினைவுடனேயே, வகுப்புக்குள் நுழைந்தவன், மனதை படிப்படியாக மாற்றிக் கொண்டான். பேராசிரியர், எப்படி இருக்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு வரலாம. மாணவர்களைத் தப்பாக நினைத்து விட்டார்களே என்று இரண்டு சென்டன்ஸ் சூடாகவே கேட்கலாம். இருந்தாலும், அவருக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம்

ஆகாது.

பேராசிரியர் பெருமாள்சாமி, சாய்வு நாற்காலியில் படுத்துக் கிடந்தார். நாற்காலியின் இரு சட்டங்களிலும் இரு புத்தகங்கள். இரண்டையும் மாறி மாறி எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தவர், சத்தங் கேட்டு. "வாப்பா. மேகலா நீ வரமாட்டே என்றாள். நீ வருவது நிச்சயமுன்னு நான் சொன்னேன். உட்காரு. மேகலா நாற்காலி கொண்டு வா. இனிமேல், என் கிட்டே விசிட்டர்ஸ் வரமாட்டங்க பாரு. அதனால நாற்காலிகள எடுத்துட்டேன்."

கல்லூரியில் கம்பீரப்பட்டு நின்ற முதல்வர் பெருமாள்சாமியாக முத்தையாவுக்கு அவர் காட்சிக்காட்ட வில்லை. வெறும் பெருமாள்சாமியாகவே நிராயுதபாணியாக தோன்றினார். முகத்தில் பல்வேறு கலக்க குறிக்கள். உடலைவிட்டு, உயிர் பிரியப்போவது போன்ற விரக்தி. வேலையற்ற பழைய பட்டாதாரியாய் ஆறுதல் தேடும் பாவனையோடு காணப்பட்டார்.

மேகலா, அமைதியாக ஒரு நாற்காலியைப் போட்டுவிட்டு, ஒரு ஒரமாக நின்றாள். முத்தையா அதிர்ந்து விட்டான். அரக்கத்தனமான முர்க்கத்துடன், பற்களைக் கடித்துக்கொண்டு பெரிய இடத்து ஆட்களுக்கெல்லாம் டெலிபோன் செய்து விட்டேனா பார் என்பது போல் விறுவிறுப்பாக இருப்பார் என்று நினைத்த பேராசிரியர், துவண்டு போன புடலங்காய்போல் எதையும் யோசிக்கும் திராணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/52&oldid=558658" இலிருந்து மீள்விக்கப்பட்டது