பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 * சத்திய ஆவேசம்

அற்றவராய் முடங்கிக் கிடப்பதைக் கண்டு துணுக்குற்றான். வீட்டையும் நோட்டம் விட்டான். பிரிஜ் இருப்பதாகத் தெரியவில்லை. மிக்ஸி இருந்தால், அந்த ஆட்டுக்கல் இருந்திருக்காது. ஸ்டவ் இருக்கு. ஒருவேளை, கேஸ் அடுப்பு இருக்கோ இல்லையோ.. இதுவும் வாடகை வீடோ. சொந்த வீடோ.

முத்தையாவால், பேராசிரியரையோ மேகலாவையோ நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. சாய்வு நாற்காலியின் சட்டங்களில் கிடந்த புத்தகங்களைப் பார்த்தான். உடனே பேராசிரியர் பெருமாள்சாமி என்ன புத்தகமுன்னு பார்க்கிறியா? ஒண்ணு தேவாரம். இன்னொன்று டாஸ் கேபிட்டலோட சுருக்கம். வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டே வயசாகிப் போறவங்க, கடைசியில் தேவாரத்துக்கும் பைபிளுக்கும் போயிடுவாங்க. இந்த சமுகத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வரணும் என்பது என் எண்ணம். எக்னாமிக்ஸ் இஸ் தி ஸ்டடி ஆப் தி

அறிவதே பொருளாதாரம் என்று ஆரம்பத்தில் படித்த இந்த எக்னாமிக்ஸ் புரபஸருக்கே, கார்ல் மார்க்ஸோட மூலதனத்தை முழுசா படிக்கணுமுன்னு இப்போதான், உதயமாகியிருக்கு சரி. போகட்டும். என் மேல மாணவர்களுக்கு கோபமா?

பேராசிரியர். பெருமாள்சாமி, பெருமிதத்துடன் சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். இரண்டு நிமிட நேரத்தை, நிசப்தம் விழுங்கியது. முத்தையா, மேல்லப் பேச்சுக் கொடுத்தான்.

"எங்களையும் போராடவேண்டாமுன்னு தடுத்திட்டீங்க." முத்தையா, அழுங்குரலில் தெரிவித்தான். "சார், எங்களாலதான் உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமுன்னு ஒரு குற்றவாளி மாதிரி துடிக்கேன் சார்:

"எல்லா ஆறுதல்களுலயும், அனுதாப ஆறுதல் மோசமானதுப்பா. கழிவிறக்கமுன் - சொல்லுவாங்களே அது கூடாது. இப்போவும் சொல்றேன். என்னோட பிரச்னையில், ஒங்க போராட்டம் மயிலிறகு மாதிரிதான். எனக்காக நீங்க போராடினால், நீங்களும் என்னை மாதிரி இப்படி கிடக்க வேண்டியது வரும். ஆனால், நான் வாழ்க்கையின் கடைசி வாசலில் நிற்கிறவன், நீங்களோ நுழை வாசலில் நிற்கிறவங்க. அதோட, எந்தப் போராட்டத்திற்கும் முன்னால, நம்ம நாமே ஆயுத்தப்படுத்திக்கணும்... அம்பேத்கார்கூட பள்ளிக்கூடத்திலயும், காலேஜ்லயும் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தாங்கிக்கிட்டு, தன்னை ஆயுத்தமாக்கிக் கொண்டார். கல்விக் காலத்துலயே, முழு எதிர்ப்பையும், அவர் காட்டியிருந்தால், அவர் முழுப் போராளியாய் ஆகியிருக்க முடியாது. அதனால,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/53&oldid=558659" இலிருந்து மீள்விக்கப்பட்டது